கஃபாவில் அனைத்து நபிமார்களும் தொழுதுள்ளார்கள் ?

கஃபாவில் அனைத்து நபிமார்களும் தொழுதுள்ளார்கள் என்ற செய்தி உண்மையா?

 

 

 

 


kaava

 

கஃபதுல்லாஹ் இறைவனுக்காக கட்டப்பட்ட முதல் வணக்கஸ்தலமா ?
அனைத்து நபிமார்களும் அந்த வணக்கஸ்தலத்தில் தொழுகை நடத்தினார்களா?

- ஷாகுல் ஹமீது
பதில்:
முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஃபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
அல்குர்ஆன் 3:96 
அனைத்து நபிமார்களும் கஃபத்துல்லாஹ்வில் தொழுகை நடத்தினார்களா என்று கேட்டுள்ளீர்கள்.  அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் மிஃராஜ் பயணத்தின் போது பைத்துல் முகத்தஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து நபிமார்களுக்கும் தொழுகை நடத்தியதாகவும், அதில் அனைத்து நபிமார்களும் தொழுததாகவும் ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
மிஃராஜ் பயணத்தில் பைத்துல் முகத்தஸிற்குச் செல்தல்
மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 17:1)

பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளியில் நுழைந்தேன்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: முஸ்ம் 234, அஹ்மத் 12047)
பைத்துல் முகத்தஸில்...
என்னை நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் சோந்த மனிதரைப் போன்று நல்ல தோற்றமும், நடுத்தர உயரமும் உள்ள மனிதராக இருந்தார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களில் கிட்டத்தட்ட உர்வா பின் மஸ்ஊத் சகபீயைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் உங்களுடைய தோழரை (முஹம்மத்) போன்றிருந்தார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 251)
நான் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா (அலை) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு நிறமுடைய உயரமான சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான மாக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும்) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. "அவரை (மூஸாவை) சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்'' (அல்குர்ஆன் 32:23)
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: புகாரி 3239, முஸ்ம் 239)
நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தல்
அப்போது தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் அவர்களுக்குத் தொழுவித்தேன். நான் தொழுது முடித்ததும், "முஹம்மதே! இதோ மாக்! நரகத்தின் அதிபதி! இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்'' என்று ஒருவர் சொன்னார். உடனே அவர் பக்கம் திரும்பினேன். அவர் முதல் எனக்கு (ஸலாம்) சொல் விட்டார்.
(முஸ்லிம் 251)

(இந்தச் செய்தி இப்னு ஜரீர் என்ற நூலும் இடம்பெற்றுள்ளது)

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan