[Computer Tips] கம்ப்யூட்டரில் உள்ள ஃபைல்கள் பற்றி கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள


உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் வைத்திருக்கும் கோப்புகள், மென்பொருட்களின் Properties இல் இடம்பெற்றுள தகவல்களை விபரமாக தெரிந்துகொள்ள  பயன்படுகிறது Extended File Details என்ற Portable மென்பொருள்.

இது ஒரு போர்ட்டபிள் சாப்ட்வேர். இதை ஒரு USB Flash Drive  அல்லது வேறு ஏதேனும் சேமிப்பகங்களில் இந்த மென்பொருளை சேமித்து வைக்கலாம். இதை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமில்லை.. எங்கெல்லாம் பைல்கள் பற்றிய விபரங்களை தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்த மென்பொருளை திறந்து பயன்படுத்தலாம்.
know more details of files on your computer
கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ள

இந்த டூலில் Drop and Drag வசதி இருப்பதால் உங்களுக்கு எந்த பைல் பற்றிய விபரங்கள் வேண்டுமோ, அதை டிராக் அன்ட் டிராப் செய்துவிட்டால் போதுமானது. இதன் அமைப்பு பயன்படுத்துவதற்கு மிக எளிமையான தோற்றத்தை கொண்டுள்ளது.

இந்த சிறிய மென்பொருள் உங்களுக்கு filename, file type, company name, description, legal copyright, legal trademark, trademark, comments, MD5 போன்ற தகவல்களை வழங்குகிறது.

மேலதிக வசதியாக file size, creation date, last acceded and modified dates மற்றும் CRC போன்ற தகவல்களையும் கொடுக்கிறது.

இதைப் பயன்படுத்தும்போது மற்ற மென்பொருள்களை போல அதிகமான CPU இடத்தை எடுத்துக்கொள்வதில்லை. அதனால் சிஸ்டம் ஸ்லோ ஆவதில்லை. இந்த மென்பொருளை சோதித்துப் பார்த்ததில் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கிறது.

எல்லா விதத்திலும் சிறப்பாக இயங்கும்  Extended File Details டூலானது, உங்களுக்குத் தேவையான ஃபைல்களின் பிராபர்ட்டிஸ் கூடுதல் விபரங்களை டெக்ஸ்ட் பைலாக சேமித்து தருகிறது. இதன் மூலம் அந்த பைல்களைப் பற்றிய முழுமையான தகவல்களை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

இந்த தகவல்களால் உங்கள் கம்ப்யூட்டரில் இடம்பெற்றுள்ள பைல்கள் எத்தகையது என்பதை அறிந்துகொள்வதோடு, தேவையில்லாத அதிக கொள்ளளவு கொண்ட பைல்களை கண்டிபிடித்து அகற்றவும் முடியும். இதனால் உங்களுடைய கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிக்கவும் செய்யும்.

Extended File Details டவுன்லோட் செய்ய சுட்டி: Download Extended File Details Portable Tool for free


Tags: free software, tamil tech news, #Tamil Computer Tips, Computer tips in tamil, computer tips, know about files details on computer, Extended File Details.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan