இந்தியன் பிரீமியர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் விபரம்
இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூரில் நடைபெற்றது.
இதில் அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் ஷான் வாட்சனை இந்திய ரூபா. 9.50 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கிரிஸ்டோபர் மோரீஸை டெல்லி டெயார்டெவில்ஸ் அணி இந்திய ரூபா. 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்திய வீரர்களைப் பொருத்தவரையில், யுவராஜ் சிங் இந்திய ரூபா. 7 கோடிக்கு ஏலம் போனார். அவரை சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
அதிக விலைக்கு ஏலம் போன ஏனைய வீரர்கள் விபரம்:

ரோஹித் சர்மா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) – இந்திய ரூபா. 6.50 கோடி

ஆஷிஸ் நெஹ்ரா (சன் ரைசர்ஸ் ஹைதரபாத்) – இந்திய ரூபா. 5.50 கோடி

மிட்சல் மார்ஷ் (ரைசிங் புனே சூப்பர் ஸ்டார்ஸ்) – இந்திய ரூபா. 4.80 கோடி

சஞ்சு சாம்சன் (டெல்லி டெயார்டெவில்ஸ்) – இந்திய ரூபா. 4.20 கோடி

கார்லஸ் பாரத்வைட் (டெல்லி டெயார்டெவில்ஸ்) – இந்திய ரூபா. 4.20 கோடி
ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலை பிரகடனம்: உணவின்றி 25 இலட்சம் பேர் பரிதவிப்பு
ஜிம்பாப்வேயில் வறட்சியினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெரும் பிரதேசங்களில் பேரழிவுகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலையை அறிவிக்குமாறும், அவ்வாறு அறிவித்தால்தான் சர்வதேச கொடையாளி நாடுகள் உணவு உதவிக்காக நிதி வழங்க முன்வருவார்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.
இதனால், ஜிம்பாப்வேயில் பேரழிவுகால நிலையை அந்நாட்டு அதிபர் ரொபர்ட் முகாபே பிரகடனப்படுத்தியுள்ளார்.
வறட்சி காரணமாக ஜிம்பாப்வேயில் விவசாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25 இலட்சம் மக்கள் உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
மேய்ச்சல் தரைகள் இல்லாமல் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
அங்குள்ள மக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை முதல் பதக்கத்தை இன்று (06) சுவீகரித்துள்ளது.
48 கிலோ கிராம் எடைப் பிரிவில் பளு தூக்கும் வீராங்கனை தினூஷா ஹன்சினி வௌ்ளிப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.
இதே எடைப் பிரிவில் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றெடுத்ததுடன் வெண்கலப் பதக்கத்தை பங்களாதேஷ் சுவீகரித்தது.

காத்மாண்டு,

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கம் பீகார் மாநிலத்திலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாட்டையே உருக்குலைத்து விட்டது.

தலைநகர் காட்மாண்டு வில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், பழமை வாய்ந்த புராதன சின்ன கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் சிக்கி உயிரிழந் தனர். 90 லட்சம் பேர் வீடு இன்றி தவித்தனர்.

 

குடும்பத்தையே கைது செய்தாலும் பின்வாங்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஸ அறிக்கை
68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினால் 2009 ஆம் ஆண்டின் மே மாதத்தில் பிரிவினைவாத, பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் வெற்றி கொள்ளப்பட்டதை அடுத்து அதனை எப்போதும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தமது மகன் உள்ளிட்ட சிலர் சிறையிலிடப்பட்டுள்ள நிலையில், தமது குடும்பத்தையே கைது செய்தாலும் நாட்டின் பூரண சுதந்திரத்தை மீள ஸ்தாபிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை விஜயம்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (05) நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
இந்திய – இலங்கை இணைந்த ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்வில் கலந்துக்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்வு கொழும்பில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்திய – இலங்கை இணைந்த ஆணைக்குழு 1992 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
பொருளாதார, வர்த்தக, மின்சக்தி – எரிசக்தி, கல்வி, விஞ்ஞானம் மற்றும் சுகாதாரம் ஆகிய காரணங்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதுதவிர ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
WhatsApp group இல் இனிமேல் அதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும்


உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஒன்லைனில் இணைந்திருக்க WhatsApp group வசதியை பயன்படுத்துகின்றனர்.
ஒரு ‘WhatsApp group இல் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது.
பிறகு, 2014 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கையை 256 ஆக அதிகரித்துள்ளது ‘WhatsApp.
ஆனால், இந்த புதிய வசதி அன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வரவுள்ளது
கடந்த 2014 ஆம் ஆண்டு ‘WhatsApp ஐ பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டொலருக்கு வாங்கியது. அதன்பிறகு, அமோக வளர்ச்சியை கண்டு வரும் ‘WhatsApp தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில், ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு டொலர கட்டணத்தையும் ‘WhatsApp இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தவறுதலாக உண்மையை கூறியுள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட அவர், 'யார் குற்றம் செய்திருந்தாலும் வழக்கு தாக்கல் செய்யுங்கள். தந்தைமார் செய்த தவறுகளுக்காக மகன்மாரை தண்டிக்கும் பழக்கம் நாட்டில் இல்லை. யோஷித்த உட்பட 5 பேர் பண சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி வருவதை தடுக்கவே நாங்கள் அந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தோம். குப்பையான கோப்புகளை தேடிக்கொண்டிருக்காமல், ஆட்களை கொண்டு வேலையை ஆரம்பியுங்கள் என்று இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என மகிநத ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் பல முறை தான் தவறிழைத்ததாகவும் தனது பதவிக்காலத்தில் மோசடியாளர்களை நெருக்கமாக்கி கொண்டதால், தவறு நேர்ந்ததாகவும், ஆனால் தான் தவறு செய்யவில்லை எனவும் பலதடவைகள் கூறியிருந்தார். மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, பல அமைச்சர்களின் கோப்புகள் தன்வசம் இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தந்தை செய்த தவறுகளுக்கு மகன்மாரை தண்டிக்கும் பழக்கம் நாட்டில் இல்லை என்று அண்மையில் கூறியிருப்பதன் மூலம் தான் தவறு செய்திருப்பதை முன்னாள் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.










  

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.

சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.

நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.

நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.z

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்

.பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.

தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும்.

தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும்.

மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும்.

பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.





இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில், மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் இந்தத் தீர்மானத்துக்கு அடிப்படைவாதிகள் பலர் எதிர்ப்புத் தெரிவித்த போதும் நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது கண்கள் பனிக்க மரியாதை செலுத்தியதைக் காணக்கூடியதாகவிருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முயற்சியானது எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப்படியாக இருக்கும் என பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுதந்திரம் பெற்று 1949ம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதலாவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அன்றைய தினம் டொரிங்டன் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிற்பகல் 4 மணிக்கு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுமார் 75 நிமிடங்களின் பின்னரே சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதன் பின்னரான சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. ஆட்சியில் இருந்தவர்களால் உத்தியோகப் பற்றற்ற முறையில் இது தடைசெய்யப்பட்டே இருந்தது.
இந்தநிலையில் கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே 68வது சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுத்திருந்தனர்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்வரவேண்டும் எனப் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் நேற்று கொண்டாடப்பட்ட 68வது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.
நிகழ்வின் இறுதியில் எவரும் எதிர்பார்த்திராத வகையில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்திருந்தது.
நிகழ்வில் குழுமியிருந்த மக்கள் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் இதனை பெரும் கௌரவத்துடன் அங்கீகரித்து உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றியதன் பின்னர் சிங்கள மொழியில் தேசிய கீதமும் அதனையடுத்து ஜயமங்கள பாடலும் பாடப்பட்ட பின்னர் அனைவரும் தமது ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அப்போது எதிர்பார்க்கப்பட்டவாறு தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருந்தது.
நிகழ்ச்சி நிரலுக்கமைய அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்ததன் பின்னர் தேசிய கீதம் பாடுவதற்காக அனைவரையும் எழும்பி நிற்குமாறு வேண்டப்பட்டது. அப்போதே இன்ப அதிர்ச்சியாக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது.
தேசிய கீதத்தின் இரண்டு வரிகள் பாடப்பட்டதன் பின்னர் தான் அது தமிழ் மொழி மூலமானது என்பதனை தாங்கள் தெரிந்து கொண்டதாகவும் சிங்கள மொழி மூல தேசிய கீதத்துக்கு ஒப்பாகவே தமிழ் மொழி மூல தெசிய கீதமும் இருப்பதால் இதில் பாரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை என்றும் சிங்கள மொழி பேசும் மக்கள் மனத்திருப்தியுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதனை செவிமடுக்க முடிந்தது.


pபால்டிமோரில் முஸ்லிம்கள் மத்தியில் ஒபாமா. | படம்: ஏ.பி.
பால்டிமோரில் முஸ்லிம்கள் மத்தியில் ஒபாமா. | படம்: ஏ.பி.
அமெரிக்க தேர்தல் களத்தில் இஸ்லாத்துக்கு எதிரான புது ஆவேச பேச்சுக்கள் எழுந்துள்ளதை மன்னிக்க முடியாதது என்று வர்ணித்த அதிபர் ஒபாமா, பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மீதான நடவடிக்கையை நாம் உலகிற்கு நிரூப்பிக்க வேண்டுமெனில் இஸ்லாமை ஒடுக்காமல் அது செய்யப்படுகிறது என்பதை காட்டுவதிலேயே உள்ளது என்றார்.

மேரிலாந்து, பால்டிமோரில் உள்ள மசூதிக்குச் சென்ற ஒபாமா அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தினரிடையே உரை நிகழ்த்திய போது இவ்வாறு கூறினார். அமெரிக்காவில் உள்ள மசூதிக்கு முதல் முறையாக சென்ற ஒபாமா, சமீபத்திய டோனல்டு டிரம்ப் முதற்கொண்டு பிரச்சாரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுக்கு கண்டனம் வெளியிட்டதோடு, எந்தவொரு மதநம்பிக்கைக்கு எதிரான தப்பான பரப்புரைகளை அமெரிக்க மக்கள் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றார்.

"எந்த ஒரு மதநம்பிக்கையின் மீதும் தாக்குதல் தொடுப்பது அனைத்து நம்பிக்கை மீதுமே தொடுக்கும் தாக்குதலாகும். நம்மிடையே மதச்சுதந்திரம் உள்ளது என்ற உண்மையை நாம் மதிக்க வேண்டும்.

இன்று அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களிடையே ஒருவிதமான பீதி ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். எந்த ஒரு குழு தாக்கப்பட்டாலும் அமெரிக்கர்கள் அதற்கு எதிராக எழுச்சி பெற வேண்டும்.

அனைத்து அமெரிக்கர்கள் போலவே நீங்களும் (முஸ்லிம்களும்) பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலையடைந்துள்ளீர்கள். இதற்கும் மேலாக சிலர் செய்யும் வன்முறைச் செயல்களுக்கு முஸ்லிம்-அமெரிக்கர்களை குற்றம்சாட்டி இலக்காக்குவது தவறு என்பதையும் நான் அறிகிறேன்.

9/11 தாக்குதல் முதல், பாரீஸ் தாக்குதல் மற்றும் சான் பெர்னார்டினோ தாக்குதல் வரை பயங்கரவாதத்தின் கொடுஞ்செயல்களை இஸ்லாம் மத நம்பிக்கைகளுடன் இணைத்துப் பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது.

மேலும், சமீப காலங்களில் அமெரிக்க-முஸ்லிம் மக்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத அரசியல் சொல்லாடல்கள் புழங்கி வருகின்றன. நாம் நாட்டில் இதற்கு ஒரு போதும் இடமில்லை. எனவே, முஸ்லிம் அமெரிக்கர்கள் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் அதிகமாகி வருவதிலும் ஆச்சரியமொன்றுமில்லை.

poste your adsense code அமெரிக்க முஸ்லிம் மக்களுடன் உறவாடுவது என்பது கண்காணிப்புக்கான திரையாக இருக்கக் கூடாது. எனவே உங்களுக்கு ஆதரவாக உங்கள் சக அமெரிக்கர்கள் எப்போதும் உறுதுணையாக உள்ளனர் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் முஸ்லிம் அல்லது அமெரிக்கர் அல்ல, நீங்கள் முஸ்லிமாகவும் அமெரிக்கராகவும் இருக்கிறீர்கள்" என்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
"எந்த ஒரு மதநம்பிக்கையின் மீதும் தாக்குதல் தொடுப்பது அனைத்து நம்பிக்கை மீதுமே தொடுக்கும் தாக்குதலாகும். நம்மிடையே மதச்சுதந்திரம் உள்ளது என்ற உண்மையை நாம் மதிக்க வேண்டும்.

இன்று அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களிடையே ஒருவிதமான பீதி ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். எந்த ஒரு குழு தாக்கப்பட்டாலும் அமெரிக்கர்கள் அதற்கு எதிராக எழுச்சி பெற வேண்டும்.

poste your adsense code அனைத்து அமெரிக்கர்கள் போலவே நீங்களும் (முஸ்லிம்களும்) பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலையடைந்துள்ளீர்கள். இதற்கும் மேலாக சிலர் செய்யும் வன்முறைச் செயல்களுக்கு முஸ்லிம்-அமெரிக்கர்களை குற்றம்சாட்டி இலக்காக்குவது தவறு என்பதையும் நான் அறிகிறேன்.
poste your adsense code
9/11 தாக்குதல் முதல், பாரீஸ் தாக்குதல் மற்றும் சான் பெர்னார்டினோ தாக்குதல் வரை பயங்கரவாதத்தின் கொடுஞ்செயல்களை இஸ்லாம் மத நம்பிக்கைகளுடன் இணைத்துப் பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது.

மேலும், சமீப காலங்களில் அமெரிக்க-முஸ்லிம் மக்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத அரசியல் சொல்லாடல்கள் புழங்கி வருகின்றன. நாம் நாட்டில் இதற்கு ஒரு போதும் இடமில்லை. எனவே, முஸ்லிம் அமெரிக்கர்கள் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் அதிகமாகி வருவதிலும் ஆச்சரியமொன்றுமில்லை.

அமெரிக்க முஸ்லிம் மக்களுடன் உறவாடுவது என்பது கண்காணிப்புக்கான திரையாக இருக்கக் கூடாது. எனவே உங்களுக்கு ஆதரவாக உங்கள் சக அமெரிக்கர்கள் எப்போதும் உறுதுணையாக உள்ளனர் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் முஸ்லிம் அல்லது அமெரிக்கர் அல்ல, நீங்கள் முஸ்லிமாகவும் அமெரிக்கராகவும் இருக்கிறீர்கள்" என்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்
2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்படிவங்கள் இன்று (01) முதல் ஏற்றுக் கௌ்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்படிவங்கள் இன்று (01) தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
பாடசாலை மூலம் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனைகள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மாதிரி விண்ணப்படிவம் மற்றும் ஆலோசனைகளை WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பெப்பரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னராக பரீட்சைகள் திணைக்களத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
"> முதன்முறையாக சாரதி இன்றி பயணிக்கும் பஸ் நெதர்லாந்தில் அறிமுகம் (VIDEO)



சாரதி இல்லாமல் ஓடும் கார்கள், பகுதிநேரம் கம்ப்யூட்டரால் இயக்கப்படும் தானியங்கி லாரி போன்ற கண்டுபிடிப்புகளில் உலக நாடுகள் தீவிரம்காட்டி வரும் நிலையில், சாரதி இன்றி பயணிக்கும் பஸ் ஒன்றை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி, வெள்ளோட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டுள்ளனர்.
ஆறு பயணிகளுடன் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் நடைபெற்ற இந்த சோதனை வெள்ளோட்டம் ஒரு ஆரம்பகட்ட முயற்சிதான்.
விரைவில் 6 கிலோமீற்றர் கொண்ட வேகனிங்கன் நகர வழித்தடத்தலில் மணிக்கு 25 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த ‘விபாட்’ பஸ்கள் தரம் உயர்த்தப்படும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பிள் ஐபோன்களில் விரைவில் LiFi தொழில்நுட்பம் அறிமுகம்
அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஐபோன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் ஆகச் சிறந்த தொழில்நுட்பமும், வருங்காலத்தை கணித்து புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அவை இருப்பதுதான்.
இதன் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்புத் தொழில்நுட்பமான லை-பை (LiFi) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தொழில்நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் operating system களில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக வினாடிக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க நியமனம்
எதிர்வரும் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்த முறை இருபதுக்கு20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.
இந்தத் தொடர்களில் இலங்கை அணியின் உபதலைவராக அஞ்சலொ மெத்யூஸ் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லசித் மலிங்க மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் உடல் நிலை தற்போதைக்கு சிறப்பாக இல்லாததால் இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு20 தொடரில் தினேஷ் சந்திமால் இலங்கை அணியை வழிநடத்துவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ரூ.352,000 மாதாந்த வருமானம்: சுவிஸில் வாக்கெடுப்பிற்குத் திட்டம்
வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தமது பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 2,500 ஸ்விஸ் பிராங்க்கினை (இந்திய ரூபா 1 இலட்சத்து 65 ஆயிரம் இலங்கைப் பணத்தில் 352,000 ரூபா) அளிக்க சுவிட்ஸர்லாந்து அரசு முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக, மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தீர்மானத்தின்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், மாதாந்த வருமான உத்தரவாதம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்திய முதல் நாடு என்ற பெருமையை சுவிட்ஸர்லாந்து பெறும்.
வேலைவாய்ப்பிற்கும் வருமானத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை நீக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது, வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் குறைந்தபட்ச மாதாந்த வருமானம் உறுதிப்படுத்தப்படும்.
அறிவுஜீவிகளின் குழு பரிந்துரைத்துள்ள இந்தத் திட்டத்தை ஏற்ற சுவிட்ஸர்லாந்தின் மத்திய அரசாங்கம் வாக்கெடுப்பிற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், குறைந்தபட்ச மாதாந்த வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அளவு மக்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
வெறும் 2 சதவீதம் மக்கள்தான் இந்த தொகை கிடைத்தால், வேலைக்கு செல்வதை நிறுத்த விரும்புகின்றனர். 8 சதவீதம் பேர் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
உத்தரவாத வருமானம் கொடுக்கப்பட்டால், கூடுதல் தொகைக்காக உழைப்பதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்து விடும் என இத்திட்டத்தை எதிர்க்கும் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் சுமார் ரூ.40 ஆயிரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால், அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.13.79 இலட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது



அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது அல் அமான் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் வளாகத்தில் அமைந்துள்ள மலசலக்கூட குழியொன்றிலிருந்து கழிவுகளை அகற்றிய போதே, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது 16 கைத்துப்பாக்கி ​தோட்டாக்கள் , 13 வெற்றுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைக்குண்டொன்றும், 33 டி 56 துப்பாக்கி தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பிரதாயபூர்வமாக நிகழ்வில் முதலில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அரங்கிற்கு வருகை தந்தார்.
அதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுதந்திர தின நிகழ்விற்கு வருகை தந்தார்.
சுதந்திர தின நிகழ்விற்கு தலைமை தாங்கிய, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய கொடியை ஏற்றிவைத்து நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.
நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுதருவதற்காக போரடிய தேசிய வீரர்கள் மற்றும் படையிருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றைய சுதந்திர தின தேசிய நிகழ்வை முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு மேலும் அலங்கரித்தது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தின விசேட உரையாற்றினார். ஜனாதிபதி தெரிவித்ததாவது :
"1948 ஆம் ஆண்டு எமது நாட்டு மக்கள் எதிர்பார்த்த சுதந்திரத்திற்கும், 68 வருடங்களுக்குப் பின்னர் இன்று நாம் எதிர்பார்க்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது என்பதனை நான் நம்புகிறேன். எமது நாட்டை ஆக்கிரமித்து இருந்தவர்கள் எமது நாட்டில் விட்டுச் சென்ற பிரச்சினைகளை நாம் தீர்த்துள்ளோமா என்பதனை எமது மனட்சாட்யிடம் கேட்க வேண்டும். இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்காக செயற்பாடுகளை நாம் செய்திருந்தால் 80 ஆண்டுகளின் அரம்பத்தில் யுத்தம் ஏற்பட்டிருக்காது. அவ்வாறு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் 26 வருட கால மிலேச்ச பயங்கரவாத யுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்காது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே சுதந்திரம் எனும் இந்த பதத்தின் அர்தத்தை புதிய நோக்கில் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமானது. இது மன்னர்கள் ஆட்சி செய்யும் யுகம் அல்ல.26 வருட மிலேச்ச பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ள வேண்டி செயற்பாடுகளை உரிய முறையில் நிறைவேற்றாமையின் பிரதிபலனாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கை தொடர்பில் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. யுத்தின் பின்னர் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகளை நாம் நிறைவேற்றியிருந்தால், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஊடாக பிரேரணை சமர்பிக்கப்பட்டிருக்க மாட்டாது என நான் நம்புகிறேன். இது குறித்து சிலர் தவறான விடயங்களை தெரிவிக்கின்றனர். நான் தெளிவாக ஒரு விடயத்தை கூற வேண்டும். எமது நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலே நாம் அந்தப் பிரேரணையை எதிர்கொள்கிறோம். இன்றைய 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் நான் ஒரு உறுதிமொழியை வழங்குகிறேன். மக்கள் சேவகன் என்ற வகையில் ஜனாதிபதி என்ற வகையில் இவை அனைத்தையும் நிறைவேற்றும் போது நாட்டின் இறைமையை பாதுகாப்பேன் என்பதனை கூற விரும்புகிறேன். அரசாங்கத்தின் கௌரவத்தையும், முப்படையின் கௌரவம், மற்றும் ஒட்டு மொத்த மக்களின் கௌரவத்தை பாதுகாத்து அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் அரசாங்கம் செயற்படும் என்பதனை உறுதியாக கூறுகிறேன்.

நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் பேட்டிகளிலும்,  போட்டிகளிலும் மோதிக்கொண்டாலும்,  கோலியும் மேக்ஸ்வெல்லும் சகஜமாகவும் ஜாலியாகவும் உரையாடிக்கொண்டனர்.
இந்திய அணியின் செயல்பாடு, கோலி – ஃபால்க்னர் உரையாடல், சச்சின், ஐ.பி.எல் என மேக்ஸ்வெல் கேட்ட கேள்விகளுக்கு கோலி பதிலளித்தார். களத்தில் தான் தைரியமாக தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதைப் பற்றிக் கேட்டதற்கு,  “அக்குணம் என் குடும்பத்திலேயே இருக்கிறது. என் தந்தை சிம்மராசிக்காரர். அவரும் அப்படித்தான். அதுமட்டுமின்றி டெல்லி கிரிக்கெட்டில் போராடித்தான் முன்னேற வேண்டும். அந்தப் போராட்ட குணமே இதற்குக் காரணம்” என்று கோலி கூறினார்.

ஜேம்ஸ் ஃபால்க்னருடன் தான் களத்தில் பேசியது பற்றிக் கேட்டதற்கு, “நாங்கள் வேடிக்கையாகத்தான் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசியபோது அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ பேசிக்கொள்ளவில்லை. அப்படி நடந்துகொள்ளும்போது நம் முழுத் திறனும் வெளிப்படும். கடைசிப் போட்டியில் நான் கீழே விழுந்தபோது ஃபால்க்னர் கை கொடுத்து என்னை தூக்கிவிட்டார். அவரும் ஜாலியாகத்தான் பேசுவார். இதை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று
சச்சினோடு விளையாடிய நாட்கள் தன்னால் மறக்க முடியாதவை என்றும், தன் வளர்ச்சிக்கு அவர் பெரும் பங்காற்றினார் என்றும் கோலி கூறினார். “என் ஆட்டத்தில் சிறு குறைகள் இருந்தாலும், சச்சின் தானாக வந்து என்னிடம் அதைப்பற்றிப் பேசுவார். அவ்வளவு பெரிய வீரர் ஒரு இளம் வீரரிடம் வந்து பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் சச்சின் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரோடு விளையாடியது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” என்று நெகிழ்ந்தார் கோலி.
ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர்களின் அனுபவமின்மையும், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரின் அனுபவமின்மையுமே அணிகளின் தோல்விக்குக் காரணம் என்று கோலி கூறினார். ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் எதிரணி வீரர்களிடமும் நட்பு பாராட்ட முடிகிறது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.
 
சகஜமாகக் கூறினார்.
 
 
 
கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது. 

கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும். 

உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

கண்ணின் கருவிழியின் மேல் கண்ணின் முன்புறமாக அமைந்துள்ள கண்ணின் இந்த கருவிழிப்படலம் ஒருவர் மரணம் அடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டால் அதை தேவைப்படும் ஒருவருக்கு பொருத்தி அவருக்கு பார்வையைக் கொடுக்க முடியும். ஒருவர் இறந்த பிறகும் கூட அவரது உடலில் இருந்து ஆறுமணி நேரம் கழித்தும் கூட இந்த கருவிழிப்படலம் அகற்றப்பட முடியும். 

உடலின் மற்ற உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றிப் பொருத்தும் போது அந்த உறுப்பை கொடையாக பெறுபவரின் உடல் புதிதாக பொருத்தப்பட்ட உடலுறுப்பை நிராகரிக்கும் ஆபத்து இந்த கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு. அதைவிட முக்கியமாக, பெரும்பாலான நாடுகளில் ஒரு நாளைக்கு இயற்கையாக இறப்பவர்களின் கருவிழிகள் அகற்றப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டால் மிகச் சில தினங்களுக்குள்ளேயே கருவிழிப்படல பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்கள் அனைவருக்குமே கண்பார்வையை மீண்டும் கொடுத்துவிட முடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு. 

ஆனாலும் இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த நாட்டுக்குத் தேவையான கருவிழிப்படலங்கள் தாராளமாக கிடைப்பது மட்டுமல்ல, அவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடு இலங்கை. 

கருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. இலங்கையில், இறப்பவர்களின் கண்களை தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்வதற்கான பல காரணங்களில் அப்படி செய்வதன் மூலம் மறுபிறவியில் தமக்கு சிறப்பான பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் முக்கிய பங்காற்றுகிறது. இலங்கையில், 5 பேரில் ஒருவர் தமது 'கார்னியா' எனப்படும் கருவிழிப்படலத்தை தானமாக வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை கண்தானச் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த அறக்கட்டளை நிறுவனம், 1961 ஆம் ஆண்டில் ஹட்சன் சில்வா என்ற இளம் மருத்துவரால் தொடங்கப்பட்டது. தமது கருவிழிப்படலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்ற வேட்கை, இலங்கையில் அதற்கான தேவையை தீர்த்துள்ளதுடன், மீதமானவை ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2014 இல், இலங்கையிலிருந்து சீனாவிற்கு 1000 கருவிழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு 850,  தாய்லாந்திற்கு 25, மற்றும் ஜப்பானுக்கு 50 உம் வழங்கப்பட்டுள்ளன. 

சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் ஹகார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ,மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும். 

மிகவும் எளிமையாக உறுப்பு மாற்று சிகிச்சை செய்யக் கூடிய திசுக்களில், கார்னியா எனப்படும் கருவிழிப்படலமும் ஒன்றாகும். பிரித்தெடுக்கப்பட்ட கருவிழிப்படலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டால் தேவைப்படும் நோயாளிக்கு, நான்கு வாரங்களுக்குள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட வேண்டும்.

தைரியம் இருந்தால் அரசாங்கம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் விசாரணை நடத்துங்கள் என பொது பல சேனா அமைப்பு  அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும்  தெரிவிக்கையில்,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தொடர்பில் பொலிஸாரும், பிரதமரும் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், ஞானசார தேரர் நீதிமன்றை அவமரியாதை செய்தாரா என்பதனை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் பௌத்த பிக்குகளை துரத்தாமல், ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி விசாரணை செய்யட்டும்.

ஞானசார தேரர் தனக்காக அன்றி, இனம், மதம், மொழி மற்றும் படைவீரர்கள் பற்றியே குரல்கொடுத்து வந்தார். அவர் மக்கள் முன் எடுத்துச் செல்ல முயற்சித்த எண்ணக்கருவினை நாம் அமைதியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராக நாம் போராட்டம் நடத்தவில்லை. நாட்டையும், இனத்தையும், மதத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே போராடுகின்றோம். எமது போராட்டத்தின் நோக்கம் மகிந்தவிற்கு ஆதரவான போராட்டமல்ல, படைவீரர்களை பாதுகாப்பதே எமது நோக்கமாக அமைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் படைவீரர்களை மறந்தாலும் எம்மால் அவ்வாறு இருக்க முடியாது என அவர் மேலும்  தெரிவித்தார் .
 
 
 
எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞனின் மனைவி, பத்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் தமது கணவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காலம் தாழ்த்தாது உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். குறித்த இளைஞனை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிட்ட காரணத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைதுசெய்யுமாறு கடந்த வாரம் எம்பிலிபிட்டிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும், இதுவரை எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் கைதுசெய்யப்படாத நிலையில், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


முறைகேடாக வீடு வாங்கிய குற்றச்சாட் டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வின் மனைவி சிராந்தியிடம் விசாரணைக் குழுவினர் திங்கள்கிழமை தீவிர விசா ரணை மேற்கொண்டனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ராஜ பக்சேவின் மகன் யோஷித ராஜபட்ச உள்ளிட்ட 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந் நிலையில், இப்போது ராஜ பக்சேவின் மனைவியும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.
இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது, அனுமதிக்கப்பட்டதை விட மிகக் குறைந்த விலை யில் தனக்கு நெருக்கமான வருக்கு வீட்டை வழங்கு மாறு தேசிய வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்துக்கு சிராந்தி ராஜபக்சே உத்தர விட்டுள்ளார். அதன்படி ரூ.55 லட்சம் மதிப்புள்ள வீடு, ரூ.5 லட்சத்துக்கு வழங் கப்பட்டுள்ளது. ராஜபட்ச இலங்கையில் 10 ஆண்டு கள் ஆட்சியில் இருந்தார். அப்போது அவரது குடும் பத்தினர் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக இப்போதைய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டு களை மறுத்துள்ள ராஜ பட்ச, அரசியல் பழிவாங் கும் நோக்கத்துடன் சிறீசேனா அரசு தன் மீதும், தனது குடும்பத்தினர் மீது பொய் வழக்குகளை தொடுத்து வருவதாக கூறியுள்ளார்.






நாராஹேன்பிட்டியில் உள்ள அபயாராம பௌத்த விகாரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கிருலப்பனை பூர்வாராம விகாரையின் விகாராதிபதி பத்பேரிய விமலஞான தேரர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
அபயாராம விகாரை தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுதந்திரமாக தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள விமலஞான தேரர், அச்சம் காரணமாக இது தொடர்பில் முறையிடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த முறைப்பாட்டை இன்று ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிபதி, மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.
விசாரணைகளை எதிர்வரும் 15-ம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இது சம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறும் பிரதிவாதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
| Copyright © 2013 Online Srilankan