வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ரூ.352,000 மாதாந்த வருமானம்: சுவிஸில் வாக்கெடுப்பிற்குத் திட்டம்

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ரூ.352,000 மாதாந்த வருமானம்: சுவிஸில் வாக்கெடுப்பிற்குத் திட்டம்
வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தமது பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 2,500 ஸ்விஸ் பிராங்க்கினை (இந்திய ரூபா 1 இலட்சத்து 65 ஆயிரம் இலங்கைப் பணத்தில் 352,000 ரூபா) அளிக்க சுவிட்ஸர்லாந்து அரசு முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக, மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தீர்மானத்தின்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், மாதாந்த வருமான உத்தரவாதம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்திய முதல் நாடு என்ற பெருமையை சுவிட்ஸர்லாந்து பெறும்.
வேலைவாய்ப்பிற்கும் வருமானத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை நீக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது, வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் குறைந்தபட்ச மாதாந்த வருமானம் உறுதிப்படுத்தப்படும்.
அறிவுஜீவிகளின் குழு பரிந்துரைத்துள்ள இந்தத் திட்டத்தை ஏற்ற சுவிட்ஸர்லாந்தின் மத்திய அரசாங்கம் வாக்கெடுப்பிற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், குறைந்தபட்ச மாதாந்த வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அளவு மக்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
வெறும் 2 சதவீதம் மக்கள்தான் இந்த தொகை கிடைத்தால், வேலைக்கு செல்வதை நிறுத்த விரும்புகின்றனர். 8 சதவீதம் பேர் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
உத்தரவாத வருமானம் கொடுக்கப்பட்டால், கூடுதல் தொகைக்காக உழைப்பதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்து விடும் என இத்திட்டத்தை எதிர்க்கும் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் சுமார் ரூ.40 ஆயிரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால், அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.13.79 இலட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan