உலக புகழ் பெற்ற ரெஸ்ட்லிங் (Wrestling) போட்டிகளில் கடைசி நேர நிகழ்வுகள் தான் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
வளையத்திற்கு வெளியிலும், உள்ளேயும் நடக்கும் அத்தகைய நிகழ்வுகள் சில சமயங்களில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்.
கடைசி நேரத்தில் வெற்றி கொள்ளும் யுக்தியை Heavy Weight Champion ரோமன் ரிஜன்ஸ் அடிக்கடி பயன்படுத்துவார்.
ஆனால் பல ஆண்டுகளாக ரைனோ, கோல்ட்பர்க், பாடிஸ்டா, பிக் ஷோ மற்றும் எட்ஜ் போன்றவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.




சிரியாவில் மதாயா பகுதியை சேர்ந்த 40,000 மக்கள் அசாத்தின்
கொடுங்கோன்மை காரணமாக உணவின்றி பட்டினியால் சிறுகச்சிறுக மரணத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு வழியில்லாமல் பூனை, நாய், இலை குழைகள் மற்றும் குப்பையில் இருப்பவற்றையும் உண்டு வருகிறார்கள். இம்மக்களுக்கு படைத்த அல்லாஹ்வைத்தவிர வேறு துணையில்லை.
கடும் பட்டினியால் மரணத்தை எதிர் நோக்கும் நிலையில்,
சவூதி அரேபியாவை சேர்ந்த உலமாக்கள் இவற்றை உண்பது ஹலால் என்ற பத்வாவை கொடுத்துள்ளார்கள்.
ஆனால்........,
"இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்கு செல்வது மார்க்க கடமை"
என்பதை, இஸ்லாமிய இராணுவ படைகளுக்கு எடுத்துரைக்காமல் விட்டுவிட்டார்கள்.
ஒருவேளை
இது சவூதி மன்னர்மீதுள்ள விசுவாசமோ???......
ஆதாரம் : Doam


அரபு வம்சாவளியைசேர்ந்த அமெரிக்க முஸ்லிமான 21 வயது நிரம்பிய நூர் தாகூர் தனது ஹிஜாப் வாழ்க்கைபற்றி இங்கு
அறியத்தருகிறார்......
ஒரு சிறிய அமெரிக்க கிராமத்தில் பிறந்த இவருடைய போராட்டம் இங்கு இளம் வயதிலேயே ஆரம்பமானது.
கிராமத்தில் இவர்களைசுற்றி அதிகளவு முஸ்லிம்கள் இருக்கவில்லை. இருந்தாலும் இவர் வித்தியாசமான முஸ்லிமாகவும், ஒரு உண்மையான முஸ்லிம் அடையாளத்துடனும் வாழ விரும்பியுள்ளார்.
இந்த அடையாளத்தினால், நூர் தாகூர் மிகப்பெரிய
சவாலை சந்திக்க வேண்டியிருந்துள்ளது.( Identity Crisis)
அன்றைய கால கட்டத்தில் இவரை போன்றே அமெரிக்க முஸ்லிம்கள் பலரும் இந்த சவாலை எதிர் நோக்க வேண்டியிருந்தது. எந்த மதம், கலாச்சாரம், அல்லது பின்னணி போன்ற கேள்விகள் கேட்கப்படுவதை இவர் விரும்பவில்லை.
இவர் விரும்பி பார்க்கும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளர் இவரை கவர்ந்தபடியால், தானும் தொகுப்பாளராக வர வேண்டுமென விரும்பியுள்ளார். இதற்கு இவருடைய பெற்றோர் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
ஒருநாள், ABC (American Broadcasting Cooperation) தளத்தில் இவர் தனது படத்தை பதிந்து "இவ்வாறுதான் நான் இருக்க விரும்புகின்றேன்" என்று குறிப்பிட்ட பதிவு உலகம் முழுவதும் வேகமாக பரவி, இவரை தொடர்ந்து மக்கள் தங்களது விருப்பங்களையும் அங்கு பதிவிட ஆரம்பித்தனர்.
CBS வானொலி இவரை செய்தித்துறையில் பயிற்சிபெறுபவரக தேர்ந்தெடுத்தது. இன்று நூர் தாஹிர் ஹிஜாப் அணிந்த தொலைக்காட்சி ஊடகவியளாளராவார்.
முஸ்லிம்கள் பற்றியும், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பற்றியும் தனது தொகுப்புரைகளில் அழகாக விளக்கமளித்து வருகிறார்.

thanks for  Meezan - தராசு

கேப்டவுன் - தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஆம்லா விலகியதால் டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார், இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைத்துவ பொறுப்பிற்கு டிவில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஹஷிம் ஆம்லா 201 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டி டிரா ஆவதை உறுதி செய்தார், இவருடைய இன்னிங்ஸ் மற்றும் டிவில்லியர்ஸ் மற்றும் கடைசியாக டெம்பா பவுமாவின் அதிரடி சதம் ஆகியவை இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்கோருக்கு அருகில் கொண்டு சென்றது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து சொதப்பியது,
ஆனாலும் அதனால் ஒன்றும் ஆகிவிடவில்லை, டெஸ்ட் டிரா ஆனது. இந்நிலையில் ஆம்லா கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். கிரேம் ஸ்மித் ஓய்வு பெற்ற பிறகு 2014-ல் கேப்டன்சி பொறுப்பேற்ற ஆம்லா, இந்தத் தொடருடன் 6-வது தொடராக கேப்டன்சியில் இருந்துள்ளார். இதில் இலங்கை, ஜிம்பாப்வே, மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்களில் தென் ஆப்பிரிக்கா வென்றது. வங்கதேசத்துக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட தொடர் டிரா ஆனது. இந்தியாவுக்கு எதிராக 0-3 தோல்வி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கேப்டன்சி துறப்பு பற்றி கூறிய ஆம்லா தெரிவிக்கையில்,
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, நான் எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். நான் எனது இந்த முடிவில் சவுகரியமாகவே உணர்கிறேன், மேலும் நான் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். மேலும் இது எனது தனிப்பட்ட முடிவே, என்னை விட வேறொருவர் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று நினைத்தேன் அதனால் இருவாரங்களுக்கு முன்பே முடிவெடுத்தேன், இதனை அணி வீரர்களிடத்திலும் விவாதித்தேன் என்றார்.

1. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். உங்கள் பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உடலில் சக்தி வேண்டும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால், சக்தியின்மையால் தலைச்சுற்றல் வரும்.
எனவே, பயிற்சி தொடங்கும் முன் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, பழங்கள் அளவோடு சாப்பிட்ட பின் செய்தால், உடல் சோர்வடையாது, உடல் வலுப்பெறும்.

2. தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
3. பயிற்சியைத் தொடங்கம் முன் உடல் உறுப்புகளை சிறிதுநேரம் அசையுங்கள் (வாம் அப் செய்யுங்கள்)-. இதனால் பயிற்சி எளிதாகும்.
4. உடல் எடையை உடனே குறைக்கக் கூடாது. அதிக எடை உள்ளவர்கள் மாதம் 5 கிலோவுக்குமேல் குறைக்கக் கூடாது. மெல்லமெல்ல குறைப்பதுதான் சிறப்பு.
5. உடற்பயிற்சியை முறைப்படி அறிந்து செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு உடல் தகுதியாய் உள்ளதா என்று அறிந்து செய்யுங்கள்.
6. பயிற்சியின்போது தண்ணீர் அறவே குடிக்காமல் இருக்கக் கூடாது. நாக்க உலரும்போது ஒரு வாய் தண்ணீர் பருக வேண்டும். பயிற்சி முடிந்து 15 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.
முடிந்த அளவு திறந்தவெளியில் காற்றோட்டமாக உடற்பயிற்சி செய்தல் நன்மை தரும். வயல், தோட்டம் இருப்பின் அங்கு உழைப்பது மிகச் சிறந்தது. ஓடுதல், நீந்துதல், நடத்தல் போன்றவை மிகச் சிறந்தவை.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

சிரியாவில் நிலவிவரும் உள்நாட்டுப்போர் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.
ஒருபுறம் ஐஎஸ் தீவிரவாகதிகள் போரிட்டு வருகிறார்கள், மறுபுறம் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர், இந்த குண்டுவீச்சு தாக்குதலால்,பாதிக்கப்படும் மக்கள் உடமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
சில பகுதி மக்கள் தப்பித்து செல்லவும் முடியாமல், வாழவும் முடியாமல் இருதலை கொல்லிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு கிராமம்தான் பட்டினியால் செத்து மடியும் Madaya.
சிரியாவின் தலைநகரான Damascus நகரத்தில் உள்ள Madaya என்ற கிராமத்தில் வசிக்கும் 40,000 மக்கள் பசிபட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும், 30 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். இந்த கிராமத்தில் நிலவி வரும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து, அங்கு செயல்படும் மருத்துவ கவுன்சிலின் மேலாளர். Dr Mohamad Youssef கூறியதாவது, இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் 2 அல்லது 3 பேர் அன்றாடம் பசியால் இறந்துபோகின்றனர்.
அதுமட்டுமின்றி, அன்றாடம் 50 பேர் மயக்கமடைவதோடு மட்டுமல்லால் தீவிரமாக நோய்வாய்ப்படுகின்றனர்.
அதிகமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியர்வர்களே பட்டினியால் இறக்கின்றன.
இந்த மக்கள் உணவாக, தண்ணீரில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடிப்பது, மரங்களில் உள்ள இலைகளை வேகவைத்து சாப்பிடுகின்றனர்.
இவ்வகை உணகளால், வயிற்றுப்போக்கு, தோல் வியாதிகள், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர்.
மயக்கமுற்ற நிலையிலும், கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும் 24 மணிநேரமும் மக்கள் அனுமதிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதனால் இரவு, பகலாக மருத்துவ ஊழியர்கள் பணியில் இருந்து மனிதப்பேரழிவுகளை தடுத்துவந்தாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நாங்களும் உதவிசெய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
மேலும், சிலர் உயிர்வாழ்வதற்காக நாய்களையும், பூனைகளையும் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
கடந்த வாரம், கர்ப்பிணி பெண் உட்பட 30 பேர் இந்த கிராமத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்றுள்ளனர், இதில் 5 பேர் இராணுவத்தினரால் சொலை செய்யப்பட்டுள்ளனர், மீதியுள்ளவர்கள் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு ஐ.நா தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், இங்கு சிக்கி தவிக்கும் 40,000 மக்களை காப்பாற்றுமாறு சிரியா உள்நாட்டு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்த குற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக குற்றவாளி தரப்பு சட்டத்தரணிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு பொலனறுவை மேல் நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது.
இந்த தண்டனைக்கு எதிராக அவர் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை திரும்பெற அனுமதி கோரி, சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதால், மனுவை திரும்பபெறுவதாக சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கியுள்ளது.
2005 -2006 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மைத்திரிபால சிறிசேன மகாவலி அமைச்சராக இருந்த போது, பொலனறுவை, மன்னப்பிட்டி பிரதேசத்தில் கிளைமோர் குண்டை வைத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக முன்னாள் புலிகளின் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இன்ஷா அல்லாஹ்…
வெள்ளிக்கிழமை – 08.01.2016
இடம் :
☛ கடற்கரைத் திடல் – சாய்ந்தமருது
நேரம் :
☛ மாலை – 06.00 மணி முதல்
தலைப்புகள் :
-----------------------------
☛ இணைவைப்பாளர் ஜமாலியின் வாதங்களும் இஸ்லாத்தின் பதிலும்
☛ இணை வைப்பும் அதன் விபரீதங்களும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்


இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையின் கல்வித் திட்டம் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
  இலவச சீருடை விவகாரத்தில் பல்வேறுபட்ட அழுத்தங்களும் விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. உலக நாடுகளில் இலவச பாடப்புத்தகம், இலவச சீருடை வழங்கும் திட்டம் இலங்கையில் மட்டுமே உள்ளது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரச பாடசாலைகளில் நூல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலைக்கும் 50 கணனிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பராமரிப்பின்றி மூலைகளில் வீசப்பட்டுள்ளதை அவதானித்தேன். இதனால் கணனிகளை வாடகை அடிப்படையில் பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.
1200 பாடசாலைகளுக்கு மலசலகூடம், குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதேபோன்று கிராமப்புற மாணவர்களுக்கு காலணி வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

 

கொழும்பு: முதல் முறையாக உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அழகுக்கல் நிபுணர்கள் அதற்கு உரிமை கோரியுள்ளனர். ‘த ஸ்டார் ஆப் ஆடம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ப்ளூ ஸ்டார் சபையர் என்ற மாணிக்கக்கல் 1404.49 காரட் நிறை கொண்டது. இதன் சந்தை மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் இந்த மாணிக்க கல்லை 175 மில்லியன் டாலர்கள் வரை (சுமார் ஆயிரத்து நூறு கோடி ரூபாய்) ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்றும் அழகுக்கல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணிக்கக்கல் ‘இரத்தினங்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் இலங்கையின் இரத்தினபுரி பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் என்ற உலக சாதனைப் பட்டியலில் தற்போது உள்ள மாணிக்கக்கல் 1,395 காரட் நிறை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| Copyright © 2013 Online Srilankan