உலகம் முழுவதும் ஐ.எஸ்.ஸுக்கு 34 தீவிரவாதக் குழுக்கள் ஆதரவு

 http://cdn.theatlantic.com/assets/media/img/2015/02/17/ISIS_Web_feature2/1920.jpg?1440086852

(ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு கடந்த டிசம்பர் மாதம் வரை, உலகம் முழுவதும் 34 தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதம் வரை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு உலகம் முழுவதிலுமுள்ள 34 தீவிரவாத அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

மேற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்காசிய நாடுகள், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெறும் 18 மாதங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளது அவர்களது வளர்ச்சி வேகத்தைக் காட்டுகிறது.

பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், உஸ்பெகிஸ்தான், லிபியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள ஐ.நா. உறுப்பு நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

உலகின் மிக அதிக நிதி வசதி கொண்ட பயங்கரவாத அமைப்பு 

, அந்த அமைப்பால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை அதிகரிக்கச் செய்துள்ளது.
கச்சா எண்ணெய் விற்பனை மூலம் அந்த அமைப்பு கடந்த ஆண்டு 40 கோடி டாலர் (சுமார் ரூ.2,700) முதல் 50 கோடி டாலர் (சுமார் ரூ.3,400 கோடி) வரை நிதி திரட்டியுள்ளது என்று பான் கி-மூன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan