அமெரிக்க வீரர்கள் 10 பேரும் ஈரான் படையினருக்கு அஞ்சி கீழே அமர்ந்து, ஈரான் படையிடும் மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.

ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தனர். அமெரிக்க வீரர்கள் ஈரான் படையினரிடம் சரணடையும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரானுக்கு சொந்தமான பார்சி தீவு அருகில் உள்ள கடல் எல்லையில் நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வேண்டுமென்றே ஈரான் கடல் எல்லையில் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டனர்.
வீரர்கள் தெரியாமல் நுழைந்ததுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மன்னிப்பும் மேலும் விடுவிக்கப்பட்டதற்கு நன்றியும் கூறியுள்ளது.
ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட வீரர்கள் சரணடையும் வீடியோவை பலர் சமூகவலைதளங்களில் அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர்.
                                                                                    
பொதுமக்களின் நன்மைக் கருதி நாடு பூராகவும் உள்ள அரச மருந்தகங்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அரச மருந்தகங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியல் தற்போது 31 அரச மருந்தகங்கள் மட்டுமே காணப்படுவதாகவும் இதன் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிப்பதற்கு  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் அரச மருந்தகத்தை நிர்வகிக்கும் அரச மருந்தக கூட்டுத்தாபனமானது அதிக இலாபத்தை பெற்றுக் கொண்டதாகவும் இந்த இலாபமானது 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 438 மில்லியன் இலாபம் பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு,ஜன.14 (டி.என்.எஸ்) இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவை அரசியல் மேதை என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளதாக, இந்திய வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு, 2 நாள் பயணமாக சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பு நகரில் ஜனாதிபதி சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஜனாதிபதியிடம், ”கடந்த வாரம் நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை இலங்கை மக்கள் மட்டும் அல்ல, டெல்லியில் நாங்களும் மிகவும் பாராட்டினோம்” என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் ஒற்றுமைக்காக சிறிசேனா அரசு கடந்த ஒரு ஆண்டாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் இந்தியாவுக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து இலங்கை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், சிறிசேனா பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி சார்பில் இந்திய வெளியுறவு செயலாளர் வாழ்த்து தெரிவித்தார் என்றும், இலங்கையின் ஒற்றுமைக்காக ஒரு சிறந்த அரசியல் மேதை போல சிறிசேனா செயல்படுகிறார் என்று மோடி பாராட்டியதாகவும் தெரிவித்தன.
அப்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, மறுகுடியேற்றம், ரயில்வே, மின்சக்தி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கு சிறிசேனா பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தனையும் கொழும்பு நகரில் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இலங்கை அரசின் புதிய அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதித்தனர்.
இந்த சட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினை, மறுகுடியேற்ற நடவடிக்கை, வடக்கில் ராணுவம் நிலை கொண்டிருப்பது உள்ளிட்டவை பற்றி சம்பந்தன், இந்திய வெளியுறவு செயலாளரிடம் விரிவாக விவரித்தார்.
இவற்றை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஜெய்சங்கர் உறுதி அளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறின.



குவைத், ஜன.13 (டி.என்.எஸ்) அல் அப்தாலி என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள்,ஈரானுக்காகவும், ஸ்புல்லா இயக்கத்துக்காகவும் உளவு வேலையில் ஈடுபட்டதுடன், குவைத்துக்குள் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் கடத்தி வந்து தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து 2 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. ஒருவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 19 பேருக்கு தலா 5 அண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஈரான் பிரஜை, மற்றொருவர் குவைத் குடிமகன் என்றும் தகவல்கள் கூறுகின்ற
பியாங்யாங், ஜன.13-

வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை மீறிய வகையில் கடந்தவாரம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து வடகொரியா பரிசோதனை நடத்தியது. அந்நாட்டின் இந்த அத்துமீறலானது அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபை புதிய பொருளாதார தடையை அந்நாட்டின்மீது விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலையும் சம்பாதித்துள்ள நிலையில் வடகொரியா அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, ‘எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான சக்திமிக்க நாடுகள் எங்கள் மண்ணை ஆக்கிரமிக்கவோ, அச்சுறுத்தவோ முயன்றால், எந்த நேரத்திலும், எந்த இடத்தின்மீதும் தக்க பதிலடி தரும் வகையில் அணு ஆயுத பலத்தின் தரத்தையும், எண்ணிக்கையும் மேலும் விரிவுப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள அதிபர் கிம் ஜாங் உன், எதிர்காலத்தில் மேலும் சில ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்து, பரிசோதனை செய்யவும் அனுமதி அளித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு நிகராக வடகொரியாவிடம் கொடூரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 20 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், இந்த (2016) ஆண்டு அந்த ஆயுதபலம் இருமடங்காக உயரலாம். அதற்கேற்ப அணு ஆயுதங்களை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான யுரேனியத்தை அந்நாடு கையிருப்பில் வைத்துள்ளது என அண்டைநாடான சீனா ஏற்கனவே எச்சரித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.



நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மதுபான விருந்துகளில் கலந்து கொண்டமை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்றன குறித்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிகளுக்கு முதல் வந்த இரவுகளில் இலங்கை அணியினர் மதுபான விருந்துகளில் பங்கேற்றமை தொடர்பான புகைப்படங்கள் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் நடத்தை என, அவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அணியின் வீரர்கள் விருந்துகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்ல அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரையிலும் மது அருந்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்த இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 எனவும் ஒருநாள் தொடரை 3-1 எனவும் மோசமாகத் தோற்றதோடு, இரு இருபதுக்கு இருபது போட்டித் தொடரையும் கூட 2-0 என நலுவவிட்டது.

இதனால் இருபதுக்கு 20 போட்டிகளின் தரவரிசையில் சுமார் 36 மாதங்களாக முன்னிலையில் இருந்த இலங்கை தற்போது மூன்றாம் இடத்திலுள்ளது.

இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபாலவுடன் இணைந்து இலங்கை அணியினரை அழைத்து நியூஸிலாந்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராயவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
| Copyright © 2013 Online Srilankan