கார்டியன் ரிப்போர்ட் என்ற பத்திரிகை ஒரு அழகான ஆக்கத்தை நேற்று வெளியிட்டது
அதில் அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் பல செய்திகளை பதிவு செய்துள்ளது
அமெரிக்காவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்கள் இல்லாத அமெரிக்க ஏழைநாடாக மாறிவிடும் என்றும் அநத பத்திரிகை கூறியுள்ளது
இதர்கு சான்றாக அமெரிக்காவின் உயர்வுக்கு காரணமாக அமைந்த முஸ்லிம் விஞ்ஞானிகள் புகழ்பெற்ற அமெரிக்க முஸ்லிம் மருத்துவர்கள் பொறியாளர்கள் ஆய்வாளர்கள் போன்றவர்களின் பட்டியலை அந்த பத்திகை வெளியிட்டு அமெரிக்க முஸ்லிம்கள் மூலமே முன்னேறியது என்ற உண்மையை உலகிற்கு அம்பல படுத்தியுள்ளது





முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் பிரமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் இடபெற்றுள்ளது.
வெறுப்பூட்டும் சட்டமூலத்தை நிறைவேற்றாமையே இந்த வாக்குவாதத்துக்கு காரணம்.
வெறுப்பூட்டும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் பொதுபல சேனாவின் கொட்டத்தை அடக்க முடியும் என கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தவறும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சிறுபான்மை சமுகம் நம்பிக்கை இழக்க கூடும் எனவும்பொதுபல சேனா புனித குர்ஆனை அவமதித்து பேசியதையும் பிரதமரிடம் எடுத்து கூறி உள்ளார்.
இதற்கான தீர்வை பிரதமர் மிகவிரைவில் எடுக்க வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதமரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
                                           

                                only photo











உலகிலேயே மிகக்கூடுதலான திருகுர்ஆன் கல்வியை முடித்த 120,000+ முஸ்லிம்களின் பட்டமளிப்புவிழா இந்தோனிஷியாவில் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.


அமெரிக்காவில் சிக்காகோ நகரில் , இஸ்லாமிய நம்பிக்கைகளையும், மத அனுஷ்டானங்களையும் ஆதரிக்கின்றோம் என்பதனை காட்டுவதற்காக முஸ்லிமல்லாத பாடசாலையொன்றின் மாணவிகள் முஸ்லிம்களை போன்று ஹிஜாப் அணிந்து ஒரு மைல் தூர நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
இதற்கு பன்னிரெண்டுக்கும் அதிகமான முஸ்லிமல்லாத பெண்கள் சம்மதித்து, முஸ்லிம்களை போன்று ஹிஜாப் அணிந்து சென்றார்கள்.
பாடசாலை அதிபர் ஜோன் கியாம் கூறுகையில், உயர் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு இது ஒரு சோதனைக்காலம். இவ்வாறான நிகழ்வுகள் முஸ்லிம்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை இல்லாமலாக்குவதுடன், இது எமது மாணவிகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தை பற்றி அறிவதற்கு ஓர் நல்ல சந்தர்ப்பம்.ஹிஜாப் அணிந்து இம்மாணவிகள் பாடசாலைக்குள் நடமாடும்பொழுது, அவர்கள் மற்றைய மாணவிகளில் இருந்து எவ்வாறு வித்தியாசமாக தெரிந்தார்கள் என்பதை காண முடிந்தது. நான் இதை வரவேற்பதுடன், இதையிட்டு பெருமையடைகின்றேன் எனவும் கூறினார்.
ஷார்லி மோஸ்லி என்னும் பெண் கூறும் பொழுது, நான் இந்நிகழ்சியில் பங்கு பெறுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் எனது மாமா ஒரு முஸ்லிமாவார்.
இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய நம்பிக்கையை அதிகமாக மனிதர்கள் அங்கீகரிப்பதற்கு ஏதுவாக உள்ளது. இம்மார்க்கத்தைபற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அதிகமான மாணவிகள் ஹிஜாப் அணிவதன்மூலம், கூடுதலான மக்கள் ஹிஜாபை பற்றியும், இஸ்லாமிய மார்க்கத்தை பற்றியும் தெளிவு பெறுவதனால் எங்களது பாடசாலை சூழல் அமைதியும், சந்தோஷமும் மிக்கதாக காணப்படுகிறது
இந் நிகழ்வு, பத்தாம்பசலித்தனமாக முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் காட்டப்படும் காரணமற்ற வெறுப்பை இல்லாமலாக்குமெனவும், ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரை எடை போட முடியாது, அவருடன் பழக வேண்டுமென்றும் இந் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவியான யாஸ்மின் அப்துல்லாஹ் கூறினார்.
அமெரிக்காவில் ஆகக் கூடுதலான முஸ்லிம்கள் இலினோயஸ் மாநிலத்திலேயே வாழ்கிறார்கள். மதவெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்களும், குழப்பங்களும் இங்கு அதிகரித்தே வருகிறது.
ஆதாரம்:---- The Siasat Daily


சவுதி அரேபியா தலைமையில் பயங்கரவாதத்தை அழிக்க இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்பட 34 நாடுகள் பங்கு கொண்டு உள்ளது.

ரியாத்தை தலைமையகமாக கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டுத் தாக்குதல் நடத்த, ‘இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பிற்கு’ 34 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளது. சவுதி அரேபியா தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட இந்நாடுகள் முடிவு செய்துஉள்ளன. ரியாத்தை தலைமையமாக கொண்டு தாக்குதல் நடத்தப்படும், தீவிரவாதத்திற்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று சவுதி அரேபியா பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. 
இஸ்லாமியம் உலகில் ஊழல் மற்றும் அழிவை தடுக்கிறது. தீவிரவாதம் மனித கண்ணியம் மற்றும் உரிமையை தொடர்ந்து மீறுகிறது, முக்கியமாக வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய கூட்டமைப்பில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் போருக்கு தயாராக உள்ள லிபியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளும் இடம்பெற்று உள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளான மாலி, சாட், சோமாலியா மற்றும் நைஜிரியா ஆகிய நாடுகளும் இக்கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ளது. சவுதி அரேபியாவிற்கு எதிரான ஈரான் கூட்டமைப்பில் இடம்பெற வில்லை. 

சிரியா மற்றும் ஏமனில் நடைபெறும் போரில் எதிரான தக்குதலில் சவுதிஅரேபியா மற்றும் ஈரான் எதிர்-எதிர் நிலையை கொண்டு உள்ளனர். 

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படை தாக்குதல் நடத்திவருகிறது. இதன் ஒருபகுதியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தாக்குதல் நடத்திவருகிறது. 

சவூதி துணை இளவரசர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் பேசுகையில், புதிய இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு, தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும், மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க, சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு அளிக்கும். ”தற்போது ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிராக தனித்தனியாக போரிடுகிறது... எனவே கூட்டணி என்பது மிகவும் முக்கியமானது,” என்று தெரிவித்து உள்ளனர்.


கடந்த 60 வருடகாலமாக இலங்கையுடன் அமெரிக்கா பல்வேறு பணிகளில் இணைந்து கொண்டதையிட்டு  மகிழ்ச்சி அடைவதுடன், தொடர்ந்தும் இலங்கையின் நிலைபேறான பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா உதவவுள்ளது. இதைத் தெரிவிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலகத்தின் ஆலோசகரான தோமஸ் சனொன் தெரிவித்தார்.

திருகோணமலை, அமரந்தி பே ஹோட்டலில் இன்று  நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

அவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விவசாய அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி, மனிதநேய நடவடிக்கை போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 60 வருடங்களில் இலங்கை எட்டியுள்ள வெற்றிகளை கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்தும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை வழங்கக்கூடிய வகையில் சிறந்த சிவில் சமூகம் மற்றும் வினைத்திறன் மிக்க அரசாங்கத்துக்கு நாம் உதவுவோம்' என்றும் குறிப்பிட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 23 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதன்மூலம் பல திட்டங்களை வகுத்து அதன் ஊடாக மூவின மக்களையும் ஒன்றிணைத்து நாட்டில் சமத்துவத்தினை கட்டி எழுப்ப முடியும் எனவும் இங்கு தெரிவித்தார்

அதனைத்தொடர்ந்த்து குறித்த பகுதியில் அமைந்துள்ள 2ஆம் உலக மகாயுத்தத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துள்ள திருகோணமலை போர்க் கல்லறைக்கும் விஜயம் செய்தார். அங்கு அனைத்து கல்லறைகளையும் பார்வையிட்ட அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலியுடனான மரியாதை செய்தார். 

இந்நிகழ்வில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஏனைய நாடுகளுடனும் இலங்கை இணைந்து பிரச்சினைகளை சாதகமாக தீர்த்துக்கொள்ள முனைகிறது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரொஹான் பெரேரா  தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை, 1955ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது.இந்தநிலையில் தற்போது அது ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன்மூலம் பல்வேறு நன்மைகளை பெறக்கூடியதாக உள்ளது என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் இலங்கையின் வீரர்களும் பணியாற்றுகின்றனர்.இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்த உறவில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கிளிநொச்சி உதய நகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி வயது 76 என்ற முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் முதியவர் கிளிநொச்சி ஆனந்தபுரம் அம்மன் கோயிலுக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் புகையிரத பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் சம்பவ இடத்திலேயே குறித்த முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது



தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் லைகோபீன் (lycopene) சத்து (இது ஆஸ்துமா, ஹைபர் டென்ஷன், இதய படபடபடப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்) என நிறைய சத்துகள் உள்ளன.
எல்லாவற்றையும்விட, இதில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலங்களில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து காக்கும்.
தர்பூசணியில் இருக்கும் தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற மருத்துவச் சத்துகள் வெயில் காலத்தில் ஏற்படும் அக்கி, வாய்ப் புண், குடல்புண், மூலம், அம்மை போன்றவற்றிலிருந்து காக்கும்.

தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றின் தீவிரம் குறையும்.
சரும வறட்சி, மலச்சிக்கல், தசை வீக்கம் போன்றவற்றுக்கு தர்பூசணி கைகண்ட மருந்தாக உதவும்.
தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு வயோதிகம் தள்ளிப்போகும்.

எண்ணெய் வழியும் சருமம், கரும்புள்ளிகள், சரும வறட்சி, வயோதிக தோற்றம் போன்றவற்றைப் போக்க, தர்பூசணியின் சதைப்பகுதியை விதையுடன் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை ஸ்பூன் பால் பவுடர், கால் ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து, கை, போன்ற வெயில் படும் இடங்களில் தடவி, பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால்... முகம் பொலிவடையும்.
அக்கி வந்தால், நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் காவி ஒரு ஸ்பூன், ஆவாரம்பூ பொடி ஒரு ஸ்பூன் மற்றும் தர்பூசணி ஒரு ஸ்பூன் கலந்து அக்கியின் மேல் பூசலாம். இதை தொடர்ந்து செய்துவந்தால்... அக்கி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
காதி கிராஃப்ட்டில் கிடைக்கும் குளிர்தாமரை தைலம் 2 ஸ்பூனுடன் தர்பூசணி 2 ஸ்பூன் கலந்து தலையில் தடவி, 2 - 3 மணி நேரத்துக்குப் பிறகு குளித்தால் உடல் சூடு, கண் எரிச்சல் எல்லாம் மாயமாகும்.
| Copyright © 2013 Online Srilankan