இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா உதவும்



கடந்த 60 வருடகாலமாக இலங்கையுடன் அமெரிக்கா பல்வேறு பணிகளில் இணைந்து கொண்டதையிட்டு  மகிழ்ச்சி அடைவதுடன், தொடர்ந்தும் இலங்கையின் நிலைபேறான பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா உதவவுள்ளது. இதைத் தெரிவிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலகத்தின் ஆலோசகரான தோமஸ் சனொன் தெரிவித்தார்.

திருகோணமலை, அமரந்தி பே ஹோட்டலில் இன்று  நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

அவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விவசாய அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி, மனிதநேய நடவடிக்கை போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 60 வருடங்களில் இலங்கை எட்டியுள்ள வெற்றிகளை கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்தும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை வழங்கக்கூடிய வகையில் சிறந்த சிவில் சமூகம் மற்றும் வினைத்திறன் மிக்க அரசாங்கத்துக்கு நாம் உதவுவோம்' என்றும் குறிப்பிட்ட அவர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 23 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதன்மூலம் பல திட்டங்களை வகுத்து அதன் ஊடாக மூவின மக்களையும் ஒன்றிணைத்து நாட்டில் சமத்துவத்தினை கட்டி எழுப்ப முடியும் எனவும் இங்கு தெரிவித்தார்

அதனைத்தொடர்ந்த்து குறித்த பகுதியில் அமைந்துள்ள 2ஆம் உலக மகாயுத்தத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துள்ள திருகோணமலை போர்க் கல்லறைக்கும் விஜயம் செய்தார். அங்கு அனைத்து கல்லறைகளையும் பார்வையிட்ட அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலியுடனான மரியாதை செய்தார். 

இந்நிகழ்வில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan