சவுதி அரேபியா தலைமையில் பயங்கரவாதத்தை அழிக்க இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு



சவுதி அரேபியா தலைமையில் பயங்கரவாதத்தை அழிக்க இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்பட 34 நாடுகள் பங்கு கொண்டு உள்ளது.

ரியாத்தை தலைமையகமாக கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டுத் தாக்குதல் நடத்த, ‘இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பிற்கு’ 34 நாடுகள் ஒப்புதல் தெரிவித்து உள்ளது. சவுதி அரேபியா தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட இந்நாடுகள் முடிவு செய்துஉள்ளன. ரியாத்தை தலைமையமாக கொண்டு தாக்குதல் நடத்தப்படும், தீவிரவாதத்திற்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று சவுதி அரேபியா பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. 
இஸ்லாமியம் உலகில் ஊழல் மற்றும் அழிவை தடுக்கிறது. தீவிரவாதம் மனித கண்ணியம் மற்றும் உரிமையை தொடர்ந்து மீறுகிறது, முக்கியமாக வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய கூட்டமைப்பில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் போருக்கு தயாராக உள்ள லிபியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளும் இடம்பெற்று உள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளான மாலி, சாட், சோமாலியா மற்றும் நைஜிரியா ஆகிய நாடுகளும் இக்கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ளது. சவுதி அரேபியாவிற்கு எதிரான ஈரான் கூட்டமைப்பில் இடம்பெற வில்லை. 

சிரியா மற்றும் ஏமனில் நடைபெறும் போரில் எதிரான தக்குதலில் சவுதிஅரேபியா மற்றும் ஈரான் எதிர்-எதிர் நிலையை கொண்டு உள்ளனர். 

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படை தாக்குதல் நடத்திவருகிறது. இதன் ஒருபகுதியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தாக்குதல் நடத்திவருகிறது. 

சவூதி துணை இளவரசர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் பேசுகையில், புதிய இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு, தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும், மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க, சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு அளிக்கும். ”தற்போது ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிராக தனித்தனியாக போரிடுகிறது... எனவே கூட்டணி என்பது மிகவும் முக்கியமானது,” என்று தெரிவித்து உள்ளனர்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan