ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய நம்பிக்கைகளையும், மத அனுஷ்டானங்களையும் ஆதரிக்கும் முஸ்லிமல்லாத அமெரிக்க மாணவிகள்.......................................



அமெரிக்காவில் சிக்காகோ நகரில் , இஸ்லாமிய நம்பிக்கைகளையும், மத அனுஷ்டானங்களையும் ஆதரிக்கின்றோம் என்பதனை காட்டுவதற்காக முஸ்லிமல்லாத பாடசாலையொன்றின் மாணவிகள் முஸ்லிம்களை போன்று ஹிஜாப் அணிந்து ஒரு மைல் தூர நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
இதற்கு பன்னிரெண்டுக்கும் அதிகமான முஸ்லிமல்லாத பெண்கள் சம்மதித்து, முஸ்லிம்களை போன்று ஹிஜாப் அணிந்து சென்றார்கள்.
பாடசாலை அதிபர் ஜோன் கியாம் கூறுகையில், உயர் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு இது ஒரு சோதனைக்காலம். இவ்வாறான நிகழ்வுகள் முஸ்லிம்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை இல்லாமலாக்குவதுடன், இது எமது மாணவிகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தை பற்றி அறிவதற்கு ஓர் நல்ல சந்தர்ப்பம்.ஹிஜாப் அணிந்து இம்மாணவிகள் பாடசாலைக்குள் நடமாடும்பொழுது, அவர்கள் மற்றைய மாணவிகளில் இருந்து எவ்வாறு வித்தியாசமாக தெரிந்தார்கள் என்பதை காண முடிந்தது. நான் இதை வரவேற்பதுடன், இதையிட்டு பெருமையடைகின்றேன் எனவும் கூறினார்.
ஷார்லி மோஸ்லி என்னும் பெண் கூறும் பொழுது, நான் இந்நிகழ்சியில் பங்கு பெறுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் எனது மாமா ஒரு முஸ்லிமாவார்.
இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய நம்பிக்கையை அதிகமாக மனிதர்கள் அங்கீகரிப்பதற்கு ஏதுவாக உள்ளது. இம்மார்க்கத்தைபற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அதிகமான மாணவிகள் ஹிஜாப் அணிவதன்மூலம், கூடுதலான மக்கள் ஹிஜாபை பற்றியும், இஸ்லாமிய மார்க்கத்தை பற்றியும் தெளிவு பெறுவதனால் எங்களது பாடசாலை சூழல் அமைதியும், சந்தோஷமும் மிக்கதாக காணப்படுகிறது
இந் நிகழ்வு, பத்தாம்பசலித்தனமாக முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் காட்டப்படும் காரணமற்ற வெறுப்பை இல்லாமலாக்குமெனவும், ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவரை எடை போட முடியாது, அவருடன் பழக வேண்டுமென்றும் இந் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவியான யாஸ்மின் அப்துல்லாஹ் கூறினார்.
அமெரிக்காவில் ஆகக் கூடுதலான முஸ்லிம்கள் இலினோயஸ் மாநிலத்திலேயே வாழ்கிறார்கள். மதவெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்களும், குழப்பங்களும் இங்கு அதிகரித்தே வருகிறது.
ஆதாரம்:---- The Siasat Daily

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan