யோஷித ராஜபக்ஷவின் கைது 'அரசியல் பழிவாங்கல் அல்ல': சிவில் அமைப்பினர்









'முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பழிவாங்க முடியாத நிலையில் இருக்கின்ற அரசாங்கம் இன்று அவரது குடும்பத்தினரை பழிவாங்கி வருகின்றது' என்றார் தினேஷ் குணவர்தன
நிதிமோசடி குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷவை பார்ப்பதற்காக அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் பொது எதிரணிக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று கொழும்பு சிறைச்சாலைக்கு சென்றனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசியல் கைதிகள் என்றும், அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் சிறையில் உள்ளதாகவும் கூறினார்.
'முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பழிவாங்க முடியாத நிலையில் இருக்கின்ற அரசாங்கம் இன்று அவரது குடும்பத்தினரை பழிவாங்கி வருகின்றது' என்றார் தினேஷ் குணவர்தன.
இவ்வாறான பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பழிவாங்கல்களை கண்டிப்பதாக தெரிவித்தார்.
சிஎஸ்என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் சம்பந்தமாகவே யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை நியாயமாக நடந்துள்ள விடயம் என்று புரவெசி பலய என்ற சிவில் அமைப்பினர் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளனர்.
யோஷித ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமையை அரசியல் பழிவாங்கல் என்று கூறமுடியாது என்றும் புரவெசி பலய அமைப்பின் இணைத் தலைவர் சரத் விஜேசூரிய கூறினார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan