தைரியம் இருந்தால் ஐ.எஸ் குறித்து விசாரணை நடத்துங்கள்;அரசிற்கு சவால் விடுக்கும் பொதுபலசேனா


தைரியம் இருந்தால் அரசாங்கம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் விசாரணை நடத்துங்கள் என பொது பல சேனா அமைப்பு  அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும்  தெரிவிக்கையில்,
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தொடர்பில் பொலிஸாரும், பிரதமரும் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், ஞானசார தேரர் நீதிமன்றை அவமரியாதை செய்தாரா என்பதனை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் பௌத்த பிக்குகளை துரத்தாமல், ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி விசாரணை செய்யட்டும்.

ஞானசார தேரர் தனக்காக அன்றி, இனம், மதம், மொழி மற்றும் படைவீரர்கள் பற்றியே குரல்கொடுத்து வந்தார். அவர் மக்கள் முன் எடுத்துச் செல்ல முயற்சித்த எண்ணக்கருவினை நாம் அமைதியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராக நாம் போராட்டம் நடத்தவில்லை. நாட்டையும், இனத்தையும், மதத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே போராடுகின்றோம். எமது போராட்டத்தின் நோக்கம் மகிந்தவிற்கு ஆதரவான போராட்டமல்ல, படைவீரர்களை பாதுகாப்பதே எமது நோக்கமாக அமைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் படைவீரர்களை மறந்தாலும் எம்மால் அவ்வாறு இருக்க முடியாது என அவர் மேலும்  தெரிவித்தார் .

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan