உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (05) நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
இந்திய – இலங்கை இணைந்த ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்வில் கலந்துக்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்வு கொழும்பில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்திய – இலங்கை இணைந்த ஆணைக்குழு 1992 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
பொருளாதார, வர்த்தக, மின்சக்தி – எரிசக்தி, கல்வி, விஞ்ஞானம் மற்றும் சுகாதாரம் ஆகிய காரணங்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதுதவிர ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.







No comments:
fazlycherryeducation.blogspot.com