வில்பத்து சரணாயலம் அழிப்பு தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமித்து ஆராய வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களை சட்டவிரோதமாக தாம் மீள்குடியேற்றுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, ஊழல் தடுப்பு ஆணைக்குழு, ஏப்.சி.ஐ.டி, சி.ஐ.டி மற்றும் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கென செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் ஒருவரேனும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்து தீர்மானமொன்றிக்கு வரவில்லை என ரிஷாட் பதியூதீன் கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு எதிரான யாரிடமாவது ஆதாரங்கள் இருப்பின் மேல் குறிப்பிட்ட எந்தவொரு பிரிவிலும் முறைப்பாடு செய்யலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வில்பத்து சரணாலய காடழிப்பு தொடர்பில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் ரஷாட் பதியூதீன் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை அற்றவை எனவும் வில்பத்து சரணாயலப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை தாம் மீள்குடியேற்றியமை உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியுள்ளார்.
 
முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. 

முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியானவர்கள் பல இலங்கையர்கள் முகநூலில் கணக்கை தொடங்குகின்றனர். இவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இளம் சமூகத்தைப் பாதுகாக்க முகநூலில் கணக்கு ஆரம்பிக்கும் இலங்கையர்களின் வயது எல்லையை 16 ஆக மாற்றுவதற்கு அரசாங்கம் சிந்தித்து வருகின்றது. 

இது குறித்து சட்டவாளர்கள், துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகளின் கருத்துக்களை அரசாங்கம் அறிந்து வருகின்றது.



முதலாம் உலக யுத்தத்தின்பொழுது, பிரித்தானிய வல்லரசின் காலணித்துவ ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளில் இருந்து இலட்சக் கணக்கான வீரர்கள் பிரித்தானியாவிற்காக இணைந்து போரிட்டார்கள்.
அதில் இந்திய உபகண்டத்திலிருந்து 15 இலட்சம் போர் வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 4 இலட்சம் பேர் முஸ்லிம்களாவர்.
தொழுகையில் ஈடுபட்டுள்ள சிலரை இங்கு படத்தில்


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு 177 நாடுகளின் ஆதரவுடன், பலஸ்தீன் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளும் உரிமை இருக்கிறது என்ற எழுத்து வடிவிலான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன்மூலம் பலஸ்தீன் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடியதுடன் , தங்களுக்கான சுதந்திரமான பிரதேசத்தையும் கொண்டிருக்கும்.அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் கீழுள்ள எல்லா நிறுவனங்களையும், எல்லா நாடுகளையும் இத்தீர்மானத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் படியும், பலஸ்தீனிய மக்கள் தங்களது உரிமைகளை எவ்வளவு விரைவாக பெற முடியுமோ, அவ்வளவு விரைவாக பெறுவதற்கு உதவி செய்யும்படியும் வேண்டிக்கொண்டது.
இத்தீர்மானத்தின்படி, பலஸ்தீனியர்கள் அனுபவித்துவரும் சொல்லொனா துயரங்கள் உடனடியாக முடிவுக்குவரும் தேவை யிதுப்பதும், இஸ்ரவேலின் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டிய தருணம் வந்து விட்டதையும், பலஸ்தீனையர்களும், இஸ்ரவேலியர்களும் தங்களுக்குள் எப்பொழுதுமே தொடரக்கூடிய சமாதானத்துடனும், நீதியுடனும், புரிந்துணர்வுடன் வாழ வேண்டிய தருணம் வந்துள்ளது என்பதை குறிக்கும்.
ஐக்கியநாடுகள் சபையின் முன்னைய பிரதானமான "அமைதிக்கான நில விட்டுக்கொடுப்பு" (Land for peace) என்ற தீர்மானத்தின் அடிப்படையிலும், அரபு நாடுகளின் "சமாதானத்திற்கான முன்னெடுப்பு" (Peace initiative) என்ற வரைபுக்குள்ளும் அடங்குகிறது.
இத்தீர்மானம், ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தின் 9ஜூலை 2004 ம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய இஸ்ரவேலின் மதில் சுவரே பலஸ்தீனியர்களின் உரிமைகளை பாதித்ததற்கான காரணம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
கீழ்வரும் ஏழு நாடுகள் இத்தீர்மானத்திற்கெதிராக வாக்களித்துள்ளன. இஸ்ரவேல், அமெரிக்கா, கனடா, பலாவு, மிக்ரனோஸியா, நவ்ரு, மார்ஸல் தீவுகள்
நான்கு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கமரூன், டொங்கா, தெற்கு சூடான், கொண்டூராஸ்.
| Copyright © 2013 Online Srilankan