குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலிலிருந்து விலகத் தயார் : ரிஷாட்

 
வில்பத்து சரணாயலம் அழிப்பு தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமித்து ஆராய வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களை சட்டவிரோதமாக தாம் மீள்குடியேற்றுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு, ஊழல் தடுப்பு ஆணைக்குழு, ஏப்.சி.ஐ.டி, சி.ஐ.டி மற்றும் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கென செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் ஒருவரேனும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்து தீர்மானமொன்றிக்கு வரவில்லை என ரிஷாட் பதியூதீன் கேள்வி எழுப்பியுள்ளார். தமக்கு எதிரான யாரிடமாவது ஆதாரங்கள் இருப்பின் மேல் குறிப்பிட்ட எந்தவொரு பிரிவிலும் முறைப்பாடு செய்யலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வில்பத்து சரணாலய காடழிப்பு தொடர்பில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் ரஷாட் பதியூதீன் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை அற்றவை எனவும் வில்பத்து சரணாயலப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை தாம் மீள்குடியேற்றியமை உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியுள்ளார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan