ந.ஜெயகாந்தன்




பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கூடி இறுதித் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது தமிழ் , சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசியக் கீதத்தை பாடுவதற்கு தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்று பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது ;
இலங்கையின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான பாராளுமன்ற துணைக் குழுவிடம் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முதலாவதாக தேசிய சுதந்திர தினக்  கொண்டாட்டத்தின் போது இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் இறுதித் தீர்மானமெடுப்பர்.

இது நல்ல விடயமே. இரண்டு மொழிகளிலும் பாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன்.  நானும் வாசுதேவ நாணயக்காரவும் இது தொடர்பாக ஏற்கவே கூறியிருந்தோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.



ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் TNTJ வை சேர்ந்த ஹுசைன் அவருடைய தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் எண்ணற்ற TNTJ சகோதரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் அனைத்தும் ஏன் என்று சிந்தித்ததுண்டா ?

சாராயம் குடியுங்கள் என்று சொன்னார்களா ? சாராயம் குடிக்காதீர்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

வரதட்சணை வாங்குங்கள் என்று சொன்னார்களா ? வரதட்சணை வாங்காதீர்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

வட்டி வாங்குங்கள் என்று சொன்னார்களா ? வட்டி வாங்காதீர்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

அல்லாஹ்வை வணங்காதீர்கள் என்று சொன்னார்களா ? அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

நபியை பின்பற்றாதீர்கள் என்று சொன்னார்களா ? நபியை மட்டும் பின்பற்றுங்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த தாக்குதல் ?

அடி, உதை, வெட்டு, குத்து, இரத்தம் சிந்தி, ஊர் நீக்கம் செய்து, தவ்ஹீத் ஜமாஅத் குடும்பத்தினர் இறந்து விட்டால் பள்ளிவாசல் மைய வாடியில் அடக்கம் செய்ய மறுப்பு என்று இதெல்லாம் எதற்காக ?

மனசாட்சி இருந்தால் சிந்தித்தித்துப்பாருங்கள்.

இஸ்லாமிய இயக்கங்களில் RSS க்கு பிடிக்காத முக்கிய இயக்கம் TNTJ, தமிழக வரலாற்றில் எங்கேயாவது ஆர்.எஸ்.எஸ் காரனிடம் TNTJ காரன் அடி வாங்கி விட்டான் என்று எங்கேயாவது வரலாறு இருக்கிறதா ? அப்படி எங்கேயாவது TNTJ வினர் மீது தாக்குதல் நடந்து விட்டால் அடுத்த அரை மணிநேரத்தில் தமிழகத்தையே பரபரப்பாக ஆக்குகிறார்கள்.

முன்னறிவிப்பு இல்லாமல், சுவர் விளம்பரம் இல்லாமல், வால் போஸ்டர்கள் இல்லாமல் ஒரேயொரு SMS அனுப்பினால் அடுத்த அரை மணிநேரத்தில் 10 ஆயிரம் பேரை திரட்டும் சக்தி கொண்ட அமைப்பாக TNTJ இருந்தும் எங்கேயாவது 30 ஆண்டுகால வாழ்வில் உங்களை திருப்பி அடித்து உள்ளார்களா ?

அடி வாங்குவதற்கே பிறந்தவனை போன்று இரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்கியும் சிரித்த முகத்துடன் லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்கிறார்களே இதுவெல்லாம் ஏன் என்று தெரியுமா ?

அல்லாஹ்வுக்கு இணை வைத்து நீங்கள் நரகம் போய்விடக்கூடாது என்பதாலே....

எங்கே உங்களை திருப்பி அடித்து விட்டால் அதன்பிறகு நாம் சொல்லும் ஓர் இறைக்கொள்கை உங்களிடம் சென்றடையாமல் போய்விடுமே அச்சத்தின் காரணமாக தான் அடி வாங்கி அடி வாங்கி இரத்தம் சொட்டி இரத்தம் சொட்டி சிரித்த முகத்துடன் ஓர் இறைக்கொள்கையை சொல்லி வருகிறார்கள்.

இஸ்லாமிய சமுதாயமே மனசாட்சி இருந்தால் சிந்தித்துப்பார் !!
ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தையடுத்து ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் முன் அண்மையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.



அச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சில.





எரித்ரியா (28 ஜன. 2016): "ஆண்கள் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.
இச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்"​ என எரித்ரியா அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா கண்டத்தில் சூடானுக்கு அருகிலுள்ள நாடு எரித்ரியா. சுமார் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் காணப்படுகிறது. இதனால் அங்குத் திருமணம் புரியாமல் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குடும்ப வாழ்வு கிடைக்காமல் தகாத உறவுகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தவும் பெண்கள் அனைவரும் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழவும் தம் நாட்டில் வாழும் ஆண்கள் அனைவரும் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு திருமணம் புரியும் ஆண்களுக்கு வீடு மற்றும் செலவினங்களுக்கான உதவியையும் அரசே செய்யும் எனவும் அறிவித்துள்ளது.
இச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்குக் கடுமையான வேலையுடன் ஆயுள் தண்டனை சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வருமெனவும் தம் கணவரை மற்றொரு திருமணம் புரிய அனுமதிக்காத பெண்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் அச்சட்டம் கூறுகிறது.
1998-2000 ஆண்டுகளில் பக்கத்து நாடான எதியோப்பியாவுடன் நடந்தப் போரில் எரித்ரியா இராணுவ வீரர்கள் சுமார் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததைத் தொடர்ந்து பெண்களுக்குத் திருமணம் புரிய ஆண்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எரித்ரிய அரசின் இப்புதிய சட்டம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது.
அப்படியான விசாரணைகள் எதிலும் வெளிநாட்டவர் யாரும் இடம்பெற மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த பேட்டி ஒன்றில், பன்னாட்டு வல்லுநர்கள் உள்வாங்கப்படும் சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கு இல்லை எனக் கூறியுள்ளார்.
ஆனால் தேசிய சகவாழ்வு கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பில் அரசு இன்னும் அதிகாரபூர்வமான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை, விரைவில் அமைச்சரவை கூடி அது முடிவு செய்யப்படும் என அவர் கூறுகிறார்.
இலங்கை கூட்டு அனுசரணையாளராக இருந்து, ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேறிய தீர்மானத்தை செயல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், பன்னாட்டு வல்லுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் போன்ற ஒரு வழிமுறை உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு இறுதிகட்ட போரின் போது இடம்பெற்ற விஷயங்கள் குறித்து விசாரித்து அறிக்கை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்ந்து வரும் அரச குழுவின் தலைவரான நீதிபதி மக்ஸ்வெல் பரணகம எப்படியான விசாரணைகளை முன்னெடுப்பது என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்
என்றாலும், வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளுக்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயலாம் என பரிந்துரை செய்துள்ளதை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே அறிக்கையில் அப்படியான விசாரணைகள் தனித்துவமான இலங்கை வழிமுறையாகவே இருப்பதையே தாங்கள் பிரேரித்துள்ளதாகவும் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.


ரோம்

மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்தம் செய்தன. இதையடுத்து, ஈரான் மீது அந்த நாடுகள் விதித்த பொருளாதார தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, ஏராளமான தொழில் அதிபர்களுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இத்தாலி சென்ற அவர், அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இத்தாலிய நிறுவனங்களுடன், 1.25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளது.
பைப்லைன்' மூலம் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் திட்டம், பிரான்ஸ் நாட்டுடன் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம்,ரெனால்ட் உள்ளிட்ட பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடப்பட்டு உள்ளது.


ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி இத்தாலிய பிரதமர் மாட்டியோ ரென்சி இருவரும் இத்தாலியின் கலைபொருட்கள் குவிந்துள்ள
கேப்பிடோலின் அருங்காட்சியகத்திற்கு சென்றனர். ஆனால் அங்குள்ள இத்தாலியின்  விலைமதிப்பற்ற கலைப்பொருட்களான சிலைகள் அனைத்தும் வெள்ளை பெட்டிகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது.ஏன் என்றால்  ரோமனின் பெண்  தெய்வங்கள் மற்றும் ஆண் தெய்வங்களின் சிலைகள் அனைத்தும் ஆடையில்லாமல் இருந்தவைகளாகும் இதனால் தங்கள் விருந்தினர் அதிருப்தி அடைய கூடாது  அவற்றை பெட்டிகள் கொண்டு மறைத்து விடடனர்.
அதிகாரப்பூர்வ தலைவர்களின் புகைப்படங்கள்   மார்கஸ் அவ்ருலியஸ் குதிரை சவாரி செய்திருப்பது போல் இருந்த சிலையின் அருகே இருந்து எடுக்கபட்டது.ஆனால்   ரோம பேரரரசர் மற்றும் நிர்வாண சிலைகள் அனைத்தும் திரையிட்டு மூடபட்டு இருந்தன. ஆனால் இது பொது மக்கள் மத்தியில் அத்ருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  பலர் இது குறித்து கோபம் கொண்டு விமர்சனம் செய்து உள்ளனர். அரசியல் காரணங்களுக்காக நமது நாட்டின் கலாசாரத்தை பாரம்பரியத்தை விட்டு கொடுக்கவேண்டியது இல்லை என கூறி உள்ளனர்.


டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் 8 கிலோ கிராம் நிறையுடைய கல்லொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த கல் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வயிற்று வலி காரணமாக நீண்ட காரலமாக அவதியுற்று வந்த பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வயிற்றில் பாரிய கல்லொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் குறித்த பெண்ணின் வயிற்றிலிருந்து 8 கிலோ கிராம் நிறையுடைய பாரிய கல்லொன்று அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பெண் ஆரோக்கியமாக இருப்பதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன


இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.........
வயதான இஸ்லாமிய பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு
திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.
வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........
"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.
இதை கேட்டதும் நீதிபதி.........
"என்னை மன்னிக்கவேண்டும். இஸ்லாமிய சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது.
எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால்
இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."
இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......
"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம்
ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.
காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."
என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.
இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!
இந்த தீர்ப்பானது, இஸ்லாத்தின் நான்காவது கலீபா அலி (ரலி) அவர்களால் கொடுக்கப்பட்ட உண்மையான ஷரீயா தீர்ப்பை ஒத்திருப்பதாகவும், இவ்வாறான நிலைமைக்கு காரணமான சமூகம் தண்டிக்கப்பட வேண்டுமென்பதை குறித்து இத்தீர்ப்பு சுட்டிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
ஆதாரம் >>>>>>>>Spirit news- indonesia

துடுப்பாட்ட செய்தி
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 20 ஆண்டுகள் தடை!
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2016, 08:04.36 மு.ப GMT ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.குலாம் போடி இந்தியாவில் பிறந்து தென்ஆப்பிரிக்காவில் குடியேறியவர். 2012ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு (2015) நடந்த உள்ளூர் டி20 போட்டியான ராம்ஸ்லாம் டி20 தொடரில் “மேட்ச் பிக்சிங்” செய்ய வீரர்களை அணுகியதாக புகார் எழுந்தது.
இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குலாம் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரை பெப்ரவரி 9ஆம் அதிகதிவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    
செய்தியாளர் பிரசாத் எக்னலிகொட காணாமல் போனது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரசாத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது விளக்கமறியலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை வழக்கறிஞர் ஒன்றியம் சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கேட்டிருந்தது.
இதற்கிடையே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது நீதிமன்றத்துக்கு வெளியே ஒருவிதமான பதற்ற நிலைமை உருவானது.
சில பௌத்த பிக்குகளும் ஆதரவாளர்களும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோதிலும் போலிஸார் அவர்களை தடுத்தனர்.
இதற்கிடையே ஞானசார தேரரின் நடவடிக்கைகள் குறித்து தான் வெட்கப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பௌத்தர் என்ற வகையில் நாம் அனைவரும் வெட்கப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார்.
கலபொட அத்தே ஞானசார தேரரின் கைது தொடர்பில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கைது தொடர்பில், மல்வத்த மஹநாயக்க தேரருக்கு முழு அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் அங்கு கூறினார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்ற நிலையில், அதற்கு அனைவரும் கீழ்படிய வேண்டும் எனவும், புதிய அரசு வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் கூறினார். நீதிமன்றத்தின் முன் சத்தமிட்டு, அதனுள் நுழைய முற்பட்டவர்கள் மீதுதான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உரையின்போது மேலும் தெரிவித்தார்.
| Copyright © 2013 Online Srilankan