சுதந்திர தினத்தில் இரு மொழிகளில் தேசிய கீதம் பாட யோசனை; இன்னமும் இறுதித் தீர்மானம் இல்லை






ந.ஜெயகாந்தன்




பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கூடி இறுதித் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது தமிழ் , சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசியக் கீதத்தை பாடுவதற்கு தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்று பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது ;
இலங்கையின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பான பாராளுமன்ற துணைக் குழுவிடம் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முதலாவதாக தேசிய சுதந்திர தினக்  கொண்டாட்டத்தின் போது இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் இறுதித் தீர்மானமெடுப்பர்.

இது நல்ல விடயமே. இரண்டு மொழிகளிலும் பாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன்.  நானும் வாசுதேவ நாணயக்காரவும் இது தொடர்பாக ஏற்கவே கூறியிருந்தோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.


No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan