விராட் கோலியின் கோபத்துக்கு பின்னால் சிம்மராசியா?


நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் பேட்டிகளிலும்,  போட்டிகளிலும் மோதிக்கொண்டாலும்,  கோலியும் மேக்ஸ்வெல்லும் சகஜமாகவும் ஜாலியாகவும் உரையாடிக்கொண்டனர்.
இந்திய அணியின் செயல்பாடு, கோலி – ஃபால்க்னர் உரையாடல், சச்சின், ஐ.பி.எல் என மேக்ஸ்வெல் கேட்ட கேள்விகளுக்கு கோலி பதிலளித்தார். களத்தில் தான் தைரியமாக தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதைப் பற்றிக் கேட்டதற்கு,  “அக்குணம் என் குடும்பத்திலேயே இருக்கிறது. என் தந்தை சிம்மராசிக்காரர். அவரும் அப்படித்தான். அதுமட்டுமின்றி டெல்லி கிரிக்கெட்டில் போராடித்தான் முன்னேற வேண்டும். அந்தப் போராட்ட குணமே இதற்குக் காரணம்” என்று கோலி கூறினார்.

ஜேம்ஸ் ஃபால்க்னருடன் தான் களத்தில் பேசியது பற்றிக் கேட்டதற்கு, “நாங்கள் வேடிக்கையாகத்தான் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசியபோது அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ பேசிக்கொள்ளவில்லை. அப்படி நடந்துகொள்ளும்போது நம் முழுத் திறனும் வெளிப்படும். கடைசிப் போட்டியில் நான் கீழே விழுந்தபோது ஃபால்க்னர் கை கொடுத்து என்னை தூக்கிவிட்டார். அவரும் ஜாலியாகத்தான் பேசுவார். இதை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று
சச்சினோடு விளையாடிய நாட்கள் தன்னால் மறக்க முடியாதவை என்றும், தன் வளர்ச்சிக்கு அவர் பெரும் பங்காற்றினார் என்றும் கோலி கூறினார். “என் ஆட்டத்தில் சிறு குறைகள் இருந்தாலும், சச்சின் தானாக வந்து என்னிடம் அதைப்பற்றிப் பேசுவார். அவ்வளவு பெரிய வீரர் ஒரு இளம் வீரரிடம் வந்து பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் சச்சின் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரோடு விளையாடியது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” என்று நெகிழ்ந்தார் கோலி.
ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர்களின் அனுபவமின்மையும், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரின் அனுபவமின்மையுமே அணிகளின் தோல்விக்குக் காரணம் என்று கோலி கூறினார். ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் எதிரணி வீரர்களிடமும் நட்பு பாராட்ட முடிகிறது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.
 
சகஜமாகக் கூறினார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan