ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணைந்து செயற்படுகிறது

ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஏனைய நாடுகளுடனும் இலங்கை இணைந்து பிரச்சினைகளை சாதகமாக தீர்த்துக்கொள்ள முனைகிறது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரொஹான் பெரேரா  தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை, 1955ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது.இந்தநிலையில் தற்போது அது ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதன்மூலம் பல்வேறு நன்மைகளை பெறக்கூடியதாக உள்ளது என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் இலங்கையின் வீரர்களும் பணியாற்றுகின்றனர்.இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்த உறவில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan