SLTJ ரஸ்மின் வெளிநாட்டு பிரஜை... இன்று பொது பல சேனா சட்டத்தரணி மூக்குடைபட்ட சம்பவம்.



ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் புத்த மதத்தை இழிவு படுத்தும் விதமாக பேசியதாக கூறி பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் ஆரம்பமாக ஒரு சுவாரஷ்யம் நடைபெற்றது.

அதாவது தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் துணை செயலாளர்களில் ஒருவரான மவ்லவி ரஸ்மின் இலங்கையை சேர்ந்தவரில்லை என்றும் அவர் வெளிநாட்டவராக இருக்கலாம் என்றும் தமது தரப்பு சந்தேகிப்பதாகவும் அதனை உறுதி செய்யுமாறும் பொது பல சேனாவின் சார்பில் நீதி மன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை வைத்தார்.

அவருடைய கோரிக்கைக்கிணங்க தௌஹீத் ஜமாஅத்தின் துணை செயலாளர் ரஸ்மினின் ஆளடையாள அட்டை உடனே நீதிபதிக்கு காண்பிக்கப்பட்டது. அதனை அருகிலிருந்த பொலிஸ் அதிகாரியிடம் கையளித்த நீதிபதி இது உண்மையானது தானா? என்று வினவினார்.

குறித்த பொலிஸ் அதிகாரி அதனை பரிசோதித்து விட்டு இது உண்மை தான் என்று சொன்னவுடன் இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்து விட்டது தானே? என்று நீதிபதி பொது பல சேனா தரப்பு சட்டத்தரணிக்கு கூறினார்.

அதன் பின்னர் மத நிந்தனை பற்றிய வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan