தன்னை கொலை செய்ய முயற்சித்தவருக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்த குற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக குற்றவாளி தரப்பு சட்டத்தரணிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு பொலனறுவை மேல் நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது.
இந்த தண்டனைக்கு எதிராக அவர் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை திரும்பெற அனுமதி கோரி, சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதால், மனுவை திரும்பபெறுவதாக சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கியுள்ளது.
2005 -2006 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மைத்திரிபால சிறிசேன மகாவலி அமைச்சராக இருந்த போது, பொலனறுவை, மன்னப்பிட்டி பிரதேசத்தில் கிளைமோர் குண்டை வைத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக முன்னாள் புலிகளின் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan