தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் நியமனம்


கேப்டவுன் - தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஆம்லா விலகியதால் டிவில்லியர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார், இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைத்துவ பொறுப்பிற்கு டிவில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஹஷிம் ஆம்லா 201 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டி டிரா ஆவதை உறுதி செய்தார், இவருடைய இன்னிங்ஸ் மற்றும் டிவில்லியர்ஸ் மற்றும் கடைசியாக டெம்பா பவுமாவின் அதிரடி சதம் ஆகியவை இங்கிலாந்தின் மிகப்பெரிய ஸ்கோருக்கு அருகில் கொண்டு சென்றது. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து சொதப்பியது,
ஆனாலும் அதனால் ஒன்றும் ஆகிவிடவில்லை, டெஸ்ட் டிரா ஆனது. இந்நிலையில் ஆம்லா கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். கிரேம் ஸ்மித் ஓய்வு பெற்ற பிறகு 2014-ல் கேப்டன்சி பொறுப்பேற்ற ஆம்லா, இந்தத் தொடருடன் 6-வது தொடராக கேப்டன்சியில் இருந்துள்ளார். இதில் இலங்கை, ஜிம்பாப்வே, மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்களில் தென் ஆப்பிரிக்கா வென்றது. வங்கதேசத்துக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட தொடர் டிரா ஆனது. இந்தியாவுக்கு எதிராக 0-3 தோல்வி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கேப்டன்சி துறப்பு பற்றி கூறிய ஆம்லா தெரிவிக்கையில்,
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, நான் எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். நான் எனது இந்த முடிவில் சவுகரியமாகவே உணர்கிறேன், மேலும் நான் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். மேலும் இது எனது தனிப்பட்ட முடிவே, என்னை விட வேறொருவர் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று நினைத்தேன் அதனால் இருவாரங்களுக்கு முன்பே முடிவெடுத்தேன், இதனை அணி வீரர்களிடத்திலும் விவாதித்தேன் என்றார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan