நம்பினால் நம்புங்கள்




* வெனிசூலாவில் உள்ள ஒரு சிறைச்சாலையின் உள்ளே இரவு விடுதியும் அமைக்கப்பட்டிருக்கிறது!

* வெள்ளி கிரகத்தில் நாம் பேசினால், நம் குரல் ஆழமாக வெளிப்படும். அங்குள்ள அடர்த்தியான வளிமண்டலம் காரணமாக குரல்நாண்கள் மிக மெதுவாகவே துடிக்கும்.

* இறந்து உயிர்பெற்றவர்களாகக் கருதப்படும் ஜோம்பிகளுக்கு (ஹாரர் திரைப்படங்களில் வருமே), 9 சதவீத அமெரிக்கர்கள் நிஜமாகவே பயப்படுகிறார்கள்!

* 56 சதவீத ஜெர்மானியர்களும், 52 சதவீத பிரிட்டிஷாரும் உண்மையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக நம்புகின்றனர்.

* அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள், எம்ஐடி மாணவர்களிடம் ‘மாரிஜுவானா’ எனும் போதைப்பொருள் வாங்கியதுதான் முதல் ஆன்லைன் வர்த்தகம்!

* பூமியில் தோராயமாக 3,04,000 கோடி மரங்கள் உள்ளன.

* எந்தக் கையை அதிகம் பயன்படுத்துவது என்கிற தேர்வை மூன்றாவது மாதத்திலேயே கருவில் இருக்கிற குழந்தை செய்துவிடுகிறது.

* ஒரு தேனீ உலகம் முழுக்க சுற்றிவர 2 டேபிள்ஸ்பூன் தேனிலுள்ள ஆற்றலே போதுமானது!

* 2014ல் காசநோய் காரணமாக உலகில் 15 லட்சம் பேர் இறந்திருக்கின்றனர். இது எய்ட்ஸ் மரணங்களை விடவும் அதிகம்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan