வாட்ஸ் அப் செய்திகளை 'கூகுள் ட்ரைவ்'வில் சேமிக்கும் புதிய வசதி







வாட்ஸ் அப் செய்திகள் , புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் வாய்ஸ் நோட்ஸ் என அனைத்து வகையான வாட்ஸ் அப் செய்திகளையும்  'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகி இருக்கிறது.

கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இதனை அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

கம்யூட்டரில் போனை 'கனக்ட்' செய்து வாட்ஸ்அப் ஃபோல்டரில் உள்ள மெசேஜ்களை பரிமாற்றம் செய்து சேமிக்க வேண்டிய நீளமான வேலை இனி ஆண்ராய்டு பயனாளிகளுக்கு இல்லை. இந்த வசதியானது சில கைபேசிகளுக்கு மாடல்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழிமுறை :

இந்த வசதியை தொடங்க, வாட்ஸ் ஆப் setting -ல் chat and Calls பகுதியில் Chat Backup வசதியை தேர்வு செய்து வரும் பகுதியில் உங்கள் கூகிள் கணக்கை இணைப்பதன் மூலம் தொடங்கலாம்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan