எச்சரிக்கை அடுத்த மாதம் இலங்கை அழியுமா ?

 

 

 

 

 வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே சிறிலங்கா அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மர்மப் பொருள், மூன்று தொடக்கம் 7 அடி வரை (சுமார் 2 மீற்றர்) நீளமுள்ளதாக இருக்கலாம் என்றும், இது ஏவுகணை ஒன்றின் பாகமாகவோ அல்லது, அல்லது சந்திரனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பாகமாகவோ இருக்கலாம் என்று நாசாவின் நிபுணரான பில்கிரே தெரிவித்துள்ளார்.
சந்திரனுக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த மர்மப்பொருளுக்கு, விஞ்ஞானிகள் WT1190F என்று பெயரிட்டுள்ளனர். சிறிலங்கா அருகே விழப்போகும் மர்மப் பொருள்-WT1190F இந்த மர்மப்பொருள், வரும் நவம்பர் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 6.15 மணியளவில், சிறிலங்காவுக்கு அப்பால் தென்பகுதியில் சுமார் 40 மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பூமியை வந்தடைய முன்னர் எரிந்து போகும் என்று நம்பப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும், நாசா நிபுணர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த மர்மப் பொருள் மிக வேகமாகவும், சூடாகவும் பூமியை நோக்கி வரும் என்றும், இது ஏவுகணை ஒன்றின் இயந்திரத்தின் பாகமாக இருக்கலாம் என்றும், மற்றொரு விண்வெளி நிபுணரான ஜொனாத்தன் மக் டோவல் தெரிவித்துள்ளார். அதேவேளை, விண்வெளியில், சுமார் 5 இலட்சம் பல்வேறு சிதைவுகள், சுற்றிக் கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

 

 

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan