Home
life guide
புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் நோய்கள்
Posted by
oneline srilanka
|
Saturday, November 21, 2015 |
11:50:00 AM
புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் நோய்கள்
- சிகரெட்டுகளில் 4000 க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்களும், 200 வகையான விஷப்பொருட்களும், மற்றும் புற்றுநோயை உருவாக்கும் 60
ரசாயன பொருட்களும் அடங்கியுள்ளன.
புகையிலை யாரையும் விட்டு வைப்பதில்லை. மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளி வரும் புகைகூட நச்சு தன்மையுடையது.
உயிருக்கு ஊறு விளைவிக்கும்.
அடுத்தவர் புகைக்கும் பீடி அல்லது சிகரெட்டில் இருந்து வெளி வரும் புகை தான் இரண்டாம் தர புகையிலை புகை எனப்படும் ஆகும். (Second- hand Smoke). இவ்வகை இரண்டாம் தர புகையிலை புகை என எல்லோருக்குமே பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. வயது வந்தோர், புகைப்பழக்கம் இல்லாதவர்கள், இளம் குழந்தைகள், மற்றும் பச்சிளம் குழந்தைகள், ஆகியோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிக விளைவை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் :
* நெடுநாள் சுவாசப்பாதை நோய்கள், ஆஸ்துமா, காசநோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் சுவாசப்பாதை நோய்கள்.
* இருதய இரத்தக் குழாய் நோய்கள்.
* நுரையீரல் புற்றுநோய் திடீர் சிசு மரணம் உண்டாக்கும் நோய்கள் (கட்டில் இறப்பு)
பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் நலக்கோளாறுகள் :
* குழந்தை பிறப்பு குறையும் பாதிப்புகள்
* எடை குறைந்த குழந்தைகள்
* குழந்தை பிறக்கும் கர்ப்பப்பை கழுத்துப் பகுதியில் புற்றுநோய்.
No comments:
fazlycherryeducation.blogspot.com