இலங்கையின் வரவு-செலவு 2016க்கான



பி.ப. 06.25 வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு நிறைவு
பி.ப. 06.21 ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம்.
பி.ப. 06.10 வரிவிலக்குகளை மறுசீரமைக்கத் திட்டம்
பி.ப. 06.08 1 லிட்டர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும். 1 கிலோ பருப்பின் அதிகபட்ச சில்லறை விலை 169 ரூபா.
பி.ப. 06.06 12.5Kg சமையல் எரிவாயு விலை 150 ரூபாவால் குறைப்பு
பி.ப. 06.04   425 கிராம் ரின் மீனின் விலை 125 ரூபாவால் குறைக்கப்படும்.​
பி.ப. 06.03 உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்படும்.
பி.ப. 06.01 குழந்தைகளுக்கான பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்.
பி.ப.05.59 தெரிவு செய்யப்பட்ட 11 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும்.
பி.ப. 05.56 பேலியகொடை முதல் புறக்கோட்டை வரை புதிய நெடுஞ்சாலை.
பி.ப. 05.52 ரயில் பாதைகளை நவீனமயப்படுத்த 1500 மில்லியன் ஒதுக்கீடு
பி.ப. 05.51 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அரச வேலைகளில் இணைவோருக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.
பி.ப. 05.44  மத்தளை விமான நிலையம், விமானப் பொருட்கள் கேந்திர நிலையமாக மாற்றப்படும்.
பி.ப. 05.41 திகன, பதுளை மற்றும் புத்தளத்தில் உள்நாட்டு விமான நிலையங்கள்  அமைக்கப்படும்.
பி.ப. 05.33 சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களை 428 இலிருந்து 600 ஆக அதிகரிக்க நடவடிக்கை.
பி.ப. 05.30  நல்லூர், மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில்  புற்றுநோய் வைத்தியசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பி.ப.05.24 இலவசக் கல்வியில் மாற்றமில்லை.
பி.ப. 05.23  அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச WiFi வசதி.
பி.ப. 05.22 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனியைப் பெற்றுக்கொள்ள மூன்று வருட வட்டியற்ற கடன்.
பி.ப. 05.21 கிளிநொச்சியில் விஞ்ஞானப் பீடமும் வவுனியாவில் விவசாயப் பீடமும் அமைக்கப்படும்.
பி.ப. 05.19 மகாபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படும்.
பி.ப. 05.17  2018ற்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதி.
பி.ப. 05.15 கல்வித்துறைக்கு மொத்தமாக 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 5.41%.
பி.ப. 05.13 கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தின் பின்னர் கட்டாய தொழிற்பயிற்சி.
பி.ப. 05.12  அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளுக்கு வரிச்சலுகை
பி.ப. 05.11 அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2016 முடிவிற்குள் மின்சார மற்றும் மலசலக்கூட வசதி. இதற்கென 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப. 05.10 புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.
பி.ப. 05.09 தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பரிந்துரை (கடந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் அதிகரிக்கப்படாத ஊழியர்களுக்கு)
பி.ப. 05.07 சுயாதீன பணிப்பாளர் சபையின் கீழ் முறிகள் தொடர்பிலான நிறுவனம் ஆரம்பிக்கப்படும்.
பி.ப. 05.06  அனைத்து ஊழியர்களுக்கும் 5 வேலை நாட்கள் கட்டாயமாக்கப்படும்.
பி.ப. 05.04 அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 250 ரூபா ஆரம்ப வைப்புடன் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்படும்.
பி.ப. 04.56 புதிய வாகன பெறுமதி மதிப்பீட்டுக்கட்டணம் : முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் – 1500 ரூபா, ஏனைய வாகனங்களுக்கு 15000.
பி.ப. 04.52 அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள வங்கிக் கணக்கு தொழில் வழங்குனர்களால் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பி.ப. 04.50 உள்நாட்டு வங்கிகள் வௌிநாடுகளில் கிளைகளை ஆரம்பிக்கும் போது நிவாரணம் வழங்கப்படும்.
பி.ப. 04.49  2016 ஜூன் முதலாம் திகதி முதல் அனைத்து வங்கிகளும் மொத்த கடன் வழங்கும் தொகையில்  10% கடனுதவியை சிறு தொழில் ஆரம்பிப்பவர்களுக்கும் 5% கடன் உதவியை இளைஞர் மற்றும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
பி.ப.04.47 திவிநெகும நிதியம் தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைக்கப்படும்.
பி.ப. 04.44 கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் ஸ்தாபிக்கத் திட்டம்.
பி.ப. 04.42  நாட்டிலுள்ள அனைத்து ஹோட்டல்களும் அபிவிருத்தி சபையின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
பி.ப. 04.37 இலத்திரனியல் உபகரணங்கள், ஆடை உற்பத்திகள் மற்றும் பாதணிகள் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பொருட்கொள்வனவிற்குச் செல்லும் ஆசிய நாட்டவர்களை இலங்கைக்கு ஈர்க்க முடியும்.
பி.ப. 04.35 கட்டடத்துறையில் பயிற்சி பெறும் ஊழியர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு.
பி.ப. 04.32 நிர்மாணத்துறையில் எந்தவொரு வௌிநாட்டு நிறுவனத்திற்கும் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முடியும்.
பி.ப. 04.28 ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 1000 வீடுகளை அமைக்க மொத்தமாக 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப. 04.26 சேரிப்புற மக்களுக்கு 5 வருடங்களுக்குள் 1 இலட்சம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இவை நிர்மாணிக்கப்படும்.
பி.ப. 04.22  சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.
பி.ப. 04.20 வௌிநாட்டில் பணம் வைப்பீடு செய்துள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் அப்பணத்தை நாட்டில் வைப்பீடு செய்ய வேண்டும்.
பி.ப. 04.18 ஏற்றுமதி அபிவிருத்தியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
பி.ப. 04.16 எந்தவொரு வங்கியின் ஊடாகவும் இலங்கையில் நிதி முதலீடு செய்வதற்கு வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
பி.ப. 04.15  புதிய முதலீட்டு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பி.ப. 04.11  வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்கும்போது 10 மில்லியன் ரூபா முதலீடு அல்லது 500 புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 50% வரிச்சலுகை வழங்கப்படும்.
பி.ப. 04.09 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பி.ப. 04.04 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனயில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும். இதனூடாகவே அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கென 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். அரச நிறுவனங்கள் அனைத்தும் இலத்திரனியல் மயப்படுத்தப்படும்.
பி.ப. 04.03 தங்கம் இறக்குமதிக்கு வரியின்றி 50 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
பி.ப. 04.02 யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த 4000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
பி.ப. 04.01 ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் இரத்தினக்கல் ஏலம் நடைபெறும்
பி.ப. 04.00 போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
பி.ப. 03. 59  வவுனியாவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதார வலையத்திற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் .
பி.ப. 03.56 கிராமிய அபிவிருத்திக்காக ஒரு கிராம சேவையாளர் பிரிவிற்கு 1500 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப. 03.54  ரப்பர், தேயிலை உற்பத்தியை மேம்படுத்த இரண்டு வருட வரி நிவாரணம் வழங்கப்படும்.
பி.ப. 03.53 தேயிலை ஏற்றுமதியின் போது Ceylon Tea என பெயரிடப்படுவது கட்டாயமாக்கப்படும்.
பி.ப.03.52 தெங்கு உற்பத்தி மேம்பாட்டிற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப.03.51 தேயிலை உற்பத்தித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய விசேட குழு அமைக்கப்படும்.
பி.ப.03.46 கல்முனை, காரைநகர், சிலாபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்
பி.ப. 03.44 மீனவர்களுக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பி.ப.03.42 400கிராம் பால்மாவின் விலை 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாகக் குறைக்கப்படும்.
பி.ப.03.42 அரசினால் பயன்படுத்தப்படாத தரிசு நிலங்கள் குறைந்த குத்தகைக்கு பழ வகை, மரக்கறி செய்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
பி.ப.03.41 பழ வகை, மரக்கறி செய்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திர கொள்வனவிற்கு வரிவிலக்கு செய்யப்படும்.
பி.ப. 03.36 கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா எனும் நிர்ணய விலை அடிப்படையில் அரிசி அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
பி.ப. 03.35 விவசாயிகளுக்கு உயர் தரத்திலான களஞ்சியசாலைகளை அமைத்துக் கொடுக்கப்படும்.
பி.ப.03.34 தரிசு நிலங்களை விதை உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
பி.ப.03.31 தொழில்நுட்பப் பூங்கா யாழ்ப்பாணம், வன்னி, புத்தளம் மற்றும் மொனராகலையில் அமைக்கப்படும்.
பி.ப. 03.28 சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
பி.ப.03.26 சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மையை நெறிப்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்
பி.ப.03.19 சூழல் பாதிப்பு நேராத வகையிலான எரிபொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
பி.ப. 03.15 வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டு பொது போக்குவரத்துத்துறை மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்.
பி.ப. 03.10 செயற்திறன் மிக்க ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
பி.ப.03.07 நாட்டின் கடன் தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 72% ஆக உள்ளது.
பி.ப. 03.03 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்  Zero Budget Concept அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 பி.ப. 02.57 வரிவிதிப்புத் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்
பி.ப.02.47 வௌிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தை நாட்டிற்கு மீளக்கொணர சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
பி.ப. 02.45 நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக முன்னைய அரசாங்கத்தால் அதிகளவு வட்டி வீதத்திற்கு கடன்கள் பெறப்பட்டிருந்தன.
பி.ப.02.38 முன்னைய அரசாங்கத்தில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது –  நிதியமைச்சர்
பி.ப. 02.25  விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – நிதியமைச்சர்
பி.ப 02.18  எதிர்கால தலைமுனையினருக்கு சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – நிதியமைச்சர்
பி.ப 02.06 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான விடயம் – நிதியமைச்சர்
பி.ப 02.04  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க 69 ஆவது வரவுசெலவுத்திட்ட உரையினை ஆரம்பித்தார்.
பி.ப 02.03  ரவி கருணாநாயக்கவின் வருகை தற்போது இடம்பெறுகின்றது.

  • வரவு செலவுத்திட்டம் 2016, வரவு-செலவு, வரவு-செலவுத்திட்டம்

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan