கண்ணாடியை சூரிய ஒளி மின் பலகையின் மேல் பொருத்துவது ஏன்?


கண்ணாடியை சூரிய ஒளி மின் பலகையின் மேல் பொருத்துவது ஏன்? அந்தக் கண்ணாடி மேல் படியும் தூசியை என்ன செய்யலாம்? சோ.சண்முகசுந்தரம், மதுரை சூரிய ஒளி மின் பலகைகளில், 'போட்டோ வோல்டிக் செல்'கள் ஏராளமாக பதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது படும் சூரிய ஒளிதான் மின்சாரமாக மாறுகிறது. இவை மீது மழைநீர் பட்டால், நாளடைவில் செயல்திறன் குறையக்கூடும். தவிர, பறவை எச்சம், இலைகள், மரக் குச்சிகள் என்று பலவும் சூரிய ஒளி பலகைகள் மீது விழும். இதைத் தடுக்கத்தான் கண்ணாடியை பதிக்கின்றனர். இந்த கண்ணாடி மீது காற்றிலுள்ள துாசி படியும். இதை அவ்வப்போது துடைக்காவிட்டால், சூரியனின் கதிர்கள் படும் அளவு குறையும்; இதனால் மின்சார உற்பத்தியும் குறையும். தினமும் சுத்தமாக துடைத்து வைத்த சூரிய மின் பலகைகள், 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். லாரி மின்கலன் பெட்டி மீது, 'தினமும் என்னை கவனி!' என்று எழுதியிருப்பர். அதேபோலத் தான் சூரிய ஒளி பலகைகளுக்கும் பராமரிப்பு அவசியம்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan