ஐ.எஸ். அமைப்பை அழிப்பது அவசியம்: ஐ.நா. சபையிடம் பிரான்ஸ் வலியுறுத்தல்




பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து விமான நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர். படம்: ஏஎப்பி
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பின் தலைமை யகமான சிரியாவின் ரக்கா நகரம் மீது பிரான்ஸ் போர்விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வரு கின்றன.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மற்றும் அல்-காய்தா ஆதரவு அமைப்புகளை அழிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தரப்பில் நேற்றுமுன்தினம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
பாரீஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக பொறுப்பு ஏற்றுள்ளது. அந்த அமைப்பு உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் ராணுவ நடவடிக் கைகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடு களும் ஒருமனதாகச் செயல்பட்டு ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். இதற்கு ஐ.நா. சபை அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகதிகள் பிரச்சினை
பாரீஸ் தாக்குதல் குறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சிரியா, இராக் நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி வருகின்றனர். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளும் அடைக்கலம் அளித்து வருகின்றன.
இதை தீவிரவாதிகள் தங்க ளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஐரோப்பாவுக்குள் ஊடுருவியுள்ளனர். பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி யுள்ள தீவிரவாதிகளை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே துருக்கி, கிரீஸ் தீவுகளில் கரையேறும் அகதிகள் தற்போது தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பால்கன் நாடுகள் அகதிகள் நுழைய முடி யாத வகையில் தங்கள் எல்லை களை மூடி உள்ளன. இதர ஐரோப்பிய நாடுகளும் அகதிகள் விவகாரத்தில் கடுமையான நடை முறைகளைப் பின்பற்றுகின்றன.
ஆனால் அமெரிக்க கூட்டுப் படைகள், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்கள் சிரியாவில் அதிகரித் திருப்பதால் ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan